முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

புதிய ஆதார் எண் பெற வேண்டுமா...? எங்கும் அலைய வேண்டாம்... தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு...!

A camp is being held for students who do not have Aadhaar number in government aided and private schools to get a new Aadhaar number.
05:55 AM Jun 12, 2024 IST | Vignesh
Advertisement

அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆதார் எண் இல்லாத மாணவ, மாணவிகள் புதிய ஆதார் எண் பெற முகாம் நடைபெற்று வருகிறது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மத்திய, மாநில அரசுகள் வழங்கும் அனைத்து விதமான கல்வி உதவி தொகை, ஊக்கத் தொகை, நலத்திட்டங்களை பெறுவது, வங்கி கணக்குகள் தொடங்குவது, மேற்படிப்புக்கு விண்ணப்பம் செய்வது போன்ற சேவைகளுக்கு ஆதார் எண் அவசியமாகிறது. பள்ளி குழந்தைகள் இந்த சேவைகளை எவ்வித தடையும் இன்றி எளிதில் பெறுவதற்காக ‘பயிலும் பள்ளியிலேயே ஆதார்’ என்ற திட்டத்தை கோவை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கடந்த பிப்ரவரி 25-ம் தேதி தொடங்கிவைத்தார்.

Advertisement

இத்திட்டம் மூலம் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆதார் எண் இல்லாத மாணவ, மாணவிகள் புதிய ஆதார் எண் பெறுதல், ஏற்கெனவே ஆதார் எண் உள்ளவர்களுக்கு பயோமெட்ரிக் புதுப்பித்தல் உள்ளிட்ட சேவைகளை பள்ளியிலேயே மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்மூலம் 48 ஆயிரம் பள்ளி குழந்தைகளுக்கு பள்ளியிலேயே ஆதார் சேவை வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, வரும் புதிய கல்வி ஆண்டில் 60 லட்சம் பள்ளி குழந்தைகளுக்கு ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தல் மற்றும் புதிய ஆதார் பதிவு சேவைக்காக அவர்களது பள்ளியிலேயே முகாம் அமைக்கப்பட்டு, இச்சேவை தொடர்ந்து வழங்கப்படும். இந்த முகாம் 10-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.

Tags :
Aadharaadhar updateschool studentstn government
Advertisement
Next Article