”கையில் எலும்பு”..!! சந்தானத்தின் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!!
நடிகர் சந்தானம் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
கடந்தாண்டு ஜூலை மாதம் இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’. ஹாரர் - காமெடி படமாக இந்தப் படத்தில் சுரபி, ரெடின் கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தான், இப்படத்தின் அடுத்த பாகம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ (DD Next level) என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதில், சந்தானத்துடன் இணைந்து ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நடிகர் சந்தானத்தின் பிறந்த நாளை முன்னிட்டு முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. படம் மே மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More : போதைக்கு அடிமை..!! பெற்ற தாயின் கழுத்தை அறுத்த மகன்..!! ரத்த கரையை கழுவும்போது சிக்கிய சம்பவம்..!!