முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஒரே பாலின திருமணம்.. மறுஆய்வு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு..!!

A 5-judge Constitution Bench had held in October 2023 that there is no unqualified right to marriage and same-sex couples cannot claim that as a fundamental right.
05:11 PM Jul 09, 2024 IST | Mari Thangam
Advertisement

ஒரே பாலின திருமணங்களை சட்டப்பூர்வமாக்க மறுத்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனுவின் தகுதிகளை அரசியல் சாசன பெஞ்ச் பரிசீலனை செய்யும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisement

ஒரே பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 21 வழக்குகள் தொடரப்பட்டன. இவை அனைத்தையும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இந்த விவகாரத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 17ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டது. அதாவது இரண்டு நீதிபதிகள், “ஒரே பாலின திருமணத்துக்கு ஆதரவாகவும், மற்ற மூன்று நீதிபதிகள் அதற்கு எதிராகவும் தீர்ப்பு வழங்கினர். அதனால் இந்தியாவில் ஒரே பாலின திருமணத்திற்கு அனுமதி இல்லை என்பது உறுதியானது.

மேலும் ஒரே பாலின திருமண விவகாரத்தில் நாடாளுமன்றத்தால் ஒரு இறுதி சட்டம் இயற்றப்படும் வரை, இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடரும் என தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த தீர்ப்புக்கு எதிராக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

திருமண சமத்துவம் மறுக்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்த மனுதாரர்கள் செவ்வாயன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன் வாய்மொழியாக மனுவைக் குறிப்பிட்டு, திறந்த நீதிமன்ற விசாரணைக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால், அதைச் செய்ய முடியாது என்று தலைமை நீதிபதி கூறினார். மூத்த வழக்கறிஞர் என்.கே.கவுல், 'திருமண சமத்துவம்' தீர்ப்புக்கு எதிரான மறுஆய்வு மனுவைக் குறிப்பிட்டார், அங்கு உச்ச நீதிமன்றம் ஒரே பாலின திருமணங்களை சட்டத்தில் செல்லுபடியாகும் என்று அங்கீகரிக்க மறுத்தது. மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனுவின் தகுதியை அரசியலமைப்பு பெஞ்ச் கையாளும் என்றும் பெஞ்ச் கூறியது.

Tags :
Fundamental Rightsame-sex marriagesupreme court
Advertisement
Next Article