பாலஸ்தீனக் கொடியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற 6 சிறுவர்கள் கைது..!! இதன் பின்னணி என்ன?
பாலஸ்தீனக் கொடியை ஏந்தியபடி இரு சக்கர வாகனங்களில் சென்றதாகக் கூறப்படும் வீடியோ சமூக ஊடக தளங்களில் வெளியானதை அடுத்து, ஆறு சிறார்களை கைது செய்ததாக போலீஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று மதியம் 1 மணியளவில் சிக்கமகளூருவில் உள்ள தண்டரமாக்கி சாலையில் நடந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, மூன்று பேர் இரு சக்கர வாகனத்தில் இருந்தனர். 17 வயது சிறுவன் பாலஸ்தீனக் கொடியை பிடித்து அசைத்ததாகக் கூறப்படுகிறது, அதே நேரத்தில் அவர்களின் நண்பர்கள் மூன்று பேர் மற்றொரு பைக்கில் அவர்களைப் பின்தொடர்ந்தனர். மேலும், 'பாலஸ்தீனத்தை விடுவிக்க வேண்டும்' என கோஷம் எழுப்பினர்.
சம்பவத்தில் ஈடுபட்ட ஆறு சிறுவர்களையும் நாங்கள் கைது செய்தோம். அவர்கள் அனைவரும் மைனர்கள். மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் பிரிவுகள் உட்பட பாரதீய நியாய சன்ஹிதாவின் தகுந்த பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம். இரு வாகனங்களும் கொடியுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன," என மூத்த போலீஸ் அதிகாரி கூறினார்.
விசாரணையின் போது, சிறுவர்கள் உத்தரபிரதேசத்தில் பாலஸ்தீன கொடிகளை ஏந்தியபடி ஊர்வலத்தின் சில வீடியோக்களை பார்த்ததாகவும், அதனால் இன்ஸ்டாகிராமில் இதேபோன்ற ரீலை உருவாக்க விரும்புவதாகவும் தெரிவித்தனர். முன்னதாக, பா.ஜ.,வின் முன்னாள் தேசிய பொதுச் செயலாளரும், எம்.எல்.சி.யுமான சி.டி.ரவி, அனுமதியின்றி நேற்று 20க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களிலும், நான்கு சக்கர வாகனத்திலும் பாலஸ்தீன கொடியை ஏந்தியபடி பேரணி நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டினார்.
Read more ; ராகுல் காந்தியின் நாக்கை அறுத்தால் 11 லட்சம் தரேன்..!! – சிவசேனா எம்.எல்.ஏ பேச்சால் சர்ச்சை..