அவகாடோவை வைத்து கோடிகளில் சம்பாதிக்கும் BBA பட்டதாரி..!! சுவாரஸ்ய பின்னணி இதோ..!!
30 வயதே ஆன இளம் விவசாயியான ஹர்ஷித் கோதா, அவகாடோ பழங்களை விளைய வைத்து வருடத்திற்கு 1 கோடி ரூபாய் வரை சம்பாதிக்க தொடங்கி உள்ளார்.
அவகாடோ பழங்கள் வடகிழக்கு இந்தியா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் விளைகின்றன. ஏனெனில் அவை வளர 20 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை மட்டுமே தேவைப்படுகின்றன. அதற்கு மேல் அல்லது அதற்கு கீழ் வெப்பநிலை இருந்தால் அவகாடோ பழம் தாக்கு பிடிக்காது. மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்கள் அவகாடோ வளருவதற்கு ஏற்ற வானிலை கொண்ட மாநிலங்கள் கிடையாது. அவை கடுமையான வெப்பம் கொண்ட மாநிலங்கள் ஆகும்.
ஆனால் அதையும் தாண்டி, மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள இளம் விவசாயி ஹர்ஷித் கோதா அவகாடோ பழங்களை விளைய வைத்து கோடிகளில் சம்பாதிக்கிறார். போபாலில் பிறந்து வளர்ந்த ஹர்ஷித், இங்கிலாந்தில் பிபிஏ பயின்றார். விவசாயம் மீது இருந்த திடீர் ஆர்வத்தால் இஸ்ரேலில் இருந்து முதலில் 10 மரக்கன்றுகளை இறக்குமதி செய்துள்ளார், அதை வைத்து விவசாயம் செய்து.. தற்போது போபாலில் 10 ஏக்கர் அளவிற்கு அவகாடோ தோட்டங்களை வைத்து கோடிகளில் சம்பாதிக்கிறார்.
Read more ; ’மீண்டும் கரண்ட் பில் கட்டுங்க’..!! மின்வாரியத்தின் மெசேஜால் அதிர்ச்சியில் மக்கள்..!!