For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

புல்லட் ரயிலில் இருந்த 16 அடி பாம்பு! அதிர்ச்சி அடைந்த பயணிகள்! எங்கு தெரியுமா?

12:58 PM Apr 19, 2024 IST | Mari Thangam
புல்லட் ரயிலில் இருந்த 16 அடி பாம்பு  அதிர்ச்சி அடைந்த பயணிகள்  எங்கு தெரியுமா
Advertisement

ஜப்பான் நாட்டில் 60 ஆண்டுகளாக இயங்கி வரும் புல்லட் ரயிலில் 16 அடி பாம்பு இருந்ததை கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

Advertisement

ஜப்பான் நாட்டில் புல்லட் ரயில் சேவைகள் துவங்கி சுமார் 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதுவரை, ஜப்பானின் புல்லட் ரயில் சேவை குறித்து எந்த ஒரு புகாரும் எழுந்ததில்லை. சரியான நேரத்திற்கு சரியான நிலையத்திற்கும் வந்தடையும் ஜப்பான் புல்லட் ரயில் மக்களுக்கு பெரிதும் பயன்படும் சேவையாக இருந்து வருகின்றது.

இந்நிலையில், ஜப்பானின் நகோயா மற்றும் டோக்கியோ நகரங்களுக்கு இடையே செல்லும் புல்லட் ரயிலில் 16 அடி பாம்பு இருந்ததாக செய்திகள் வெளியானது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. நகோயா மற்றும் டோக்கியோ இடையில் செயல்படும் ஷிங்கன்சென் ரயில் இயக்கத்தில் இருந்தபோது பாம்பு இருப்பதை பயணி ஒருவர் கவனித்தார். உடனே, இது குறித்து ரயில்வே ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தார். அதன்படி, புல்லட் ரயிலை ஒரு நிறுத்தத்தில் நிறுத்திய அதிகாரிகள் வனத்துறையினரின் உதவியோடு இந்த 16 அடி பாம்பை ரயிலில் இருந்து அகற்றினார்கள்.

ரயிலில் இந்த பாம்பு எப்படி வந்தது என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ரயிலில் இருந்த இந்த பாம்பினால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். ரயிலில் பாம்பு கண்டறியப்பட்டதால் 17 நிமிடங்கள் தாமதமாக ரயில் நிலையத்தை சென்றடைந்துள்ளது. ஜப்பானில் புல்லட் ரயில் சேவை துவங்கிய 60 வருடங்களில் காலதாமதமாக ரயில் நிலையத்தை வந்தடைவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement