9,827 கிமீ..!! அனல் பறந்த பாதயாத்திரை..!! இது ஒரு வாழ்நாள் அனுபவம்..!! Annamalai பெருமிதம்..!!
ஊழலுக்கு எதிராகவும், மோடியை மூன்றாவது முறையாகவும் பிரதமராக்க தமிழக மக்களின் ஆதரவை பெறும் நோக்கத்திலும், ‘என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை யாத்திரை மேற்கொண்டார். அண்ணாமலையின் யாத்திரையை கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.
இந்த பயணத்தின் போது தொகுதி வாரியாக அண்ணாமலைக்கு பாஜக, தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளித்தனர். அண்ணாமலை போகும் இடமெல்லாம் ஆளும் திமுக அரசின் ஊழல்கள் மற்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தற்போது இந்த பயணம் முடிவுக்கு வந்தது. 233-வது தொகுதியாக திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடை பயணத்தை தொடங்கினார். 234-வது தொகுதியான திருப்பூர் தெற்கில் உள்ள குமரன் சிலைக்கு மாலை அணிவித்து இந்த நடை பயணத்தை நிறைவு செய்தார்.
இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில், கடந்த 2023 ஜூலை மாதம், புண்ணிய பூமியான ராமேஸ்வரம் மண்ணில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களால் தொடங்கப்பட்டு, 234 சட்டசபைத் தொகுதிகளுக்கும் பயணம் செய்து, 234 ஆவது சட்டமன்றத் தொகுதியாக திருப்பூர் தெற்கு தொகுதியில், சுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன் அவர்கள் நினைவிடத்தில், அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கி, நமது நமது என் மண் என் மக்கள் நடைபயணத்தினை நிறைவு செய்திருக்கிறோம்.
சுமார் 7 மாதங்களாக, தமிழகம் முழுவதும் மக்களோடு மக்களாகப் பயணித்ததில், தமிழக மக்கள் ஒரு மாபெரும் அரசியல் மாற்றத்தை விரும்புகின்றனர். ஊழலற்ற அரசியலை எதிர்பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நேர்மையான நல்லாட்சி, தமிழகத்திலும் அமையும் என்ற நம்பிக்கையை நம் தமிழக மக்கள் மனதில் ஏற்படுத்தியிருப்பதை உணர முடிகிறது என பதிவிட்டுள்ளார்.
மேலும், “என் மண் என் மக்கள்” பாதயாத்திரையின் போது தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளை கடந்த பயணத்தின் தொகுப்பையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், நமது மாண்புமிகு பிரதமர் திரு @narendramodi மீதான அன்பு மற்றும் பாசத்தின் வெளிப்பாடு பயணம் முழுவதும் இணையற்றது என்று தெரிவித்துள்ளார். மேலும், என் மண் என் மக்கள் பாதயாத்திரை ஒரு வாழ்நாள் அனுபவம்” என்று பகிர்ந்துள்ளார். இந்த பாதயாத்திரையின் தூரம் 9,827 கிமீ என்று அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary : Compilation of our journey in the last six months covering 234 assembly constituencies in TN during our En Mann En Makkal PadaYatra.
Read More : அதிமுக முன்னாள் MLA சத்யா வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை..!! காரணமே வேறயாம்..!!