இன்றோடு முடிவடையும் Paytm FASTag: ஃபாஸ்டேக் கணக்கை எளிய முறையில் மூடுவதற்கான வழிமுறைகள்.!
அனைத்து பேடிஎம் ஃபாஸ்டேக் பயனர்களும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட புதிய பேமெண்ட் வழங்குனருக்கு மாறுமாறு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அறிவுறுத்தியுள்ளது. இந்தப் பதிவில் உங்களது பழைய பேடிஎம் ஃபாஸ்டேகை எவ்வாறு நிறைவு செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் வழிகாட்டுதலின்படி பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் சேவைகள் இன்று நல்லிரவோடு முடிவுக்கு வருகிறது. இதனால் பேடிஎம் ஃபாஸ்டேக் பயனாளர்கள் தங்களது கணக்கை புதிதாக ரீசார்ஜ் அல்லது டாப் அப் செய்ய முடியாது. ஆனால் அவர்கள் கணக்கில் இருக்கும் மீதி பணத்தை மார்ச் 15 ஆம் தேதிக்கு பிறகும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
நாடு முழுவதிலும் ஃபாஸ்டேக் சேவையில் பேடிஎம் வங்கி முக்கிய பங்கு வகித்தது. பெரும்பாலான பயனர்கள் ஃபாஸ்டேக் சேவைக்கு பேடிஎம் ஃபாஸ்டேகை சார்ந்துள்ளனர். இந்நிலையில் பேடிஎம் வங்கியின் சேவை ஆர்பிஐ அறிவுறுத்துதலின்படி இன்று நள்ளிரவோடு முடிவுக்கு வருகிறது. இதனால் ஃபாஸ்டேக் பயன்படுத்தும் பயனாளர்கள் புதிய பேமெண்ட் வழங்குனரை தேர்வு செய்யுமாறு இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் பயனர்களை அறிவுறுத்தி இருக்கிறது.
பேடிஎம் பேமென்ஸ் வங்கி வழங்கும் ஃபாஸ்டேக் சேவையை முடித்துக் கொள்ள விரும்புவோர் பேடிஎம் செயலியின் மூலம் தங்களது கணக்கை முடித்துக் கொள்ளலாம்.உங்கள் Paytm Payments Bank FASTag-ஐ எப்படி எளிதாக மூடுவது என்பது குறித்து இங்கே காணலாம்.
உங்களது பேடிஎம் பேங்க் ஃபாஸ்டேக் கணக்கை முடித்துக் கொள்வதற்கான எளிமையான வழிமுறை:
பேடிஎம் செயலியை ஓபன் செய்து சர்ச் மெனுவில் மேனேஜ் ஃபாஸ்டேக் என்பதை தேடவும்.
மேனேஜ் ஃபாஸ்டேக் செக்சன் குடித்த பேமெண்ட் பேங்க் ஃபாஸ்டேக்குடன் இணைக்கப்பட்டுள்ள அத்தனை வாகனங்களின் லிஸ்டையும் கொடுக்கும்.
இப்போது நீங்கள் முடிக்க வேண்டிய வாகனத்தை தேர்வு செய்து குளோஸ் ஃபாஸ்டேக் என்பதை தேர்வு செய்யவும்.
உங்கள் தேர்வு நீங்கள் உறுதிப்படுத்தியதும் உங்களுக்கான கன்ஃபர்மேஷன் மெசேஜ் உங்களது திரையில் தோன்றும். நீங்கள் தேர்வு செய்த ஃபாஸ்டேக் கணக்கு 5 முதல் 7 வேலை நாட்களில் முடிவடையும்.
உங்களது கணக்கு மூடப்பட்ட பிறகு பாதுகாப்பு வைப்புத் தொகை மற்றும் குறைந்தபட்ச பேலன்ஸ் ஆகியவை உங்களது Bank Wallet-க்கு திருப்பி அளிக்கப்படும்.
வெள்ளிக்கிழமை அன்று பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 நிறுவனத்திற்கு மூன்றாம் தரப்பு அப்ளிகேஷன் வழங்குனராக யுபிஐ பண பரிமாற்றத்தில் பங்கேற்க நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அனுமதி வழங்கி இருக்கிறது. ஆக்சிஸ் பேங்க் ஹச்டிஎஃப்சி பேங்க் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் எஸ் பேங்க் ஆகியவை பணம் செலுத்தும் முறை வழங்குநராக (PSP) செயல்படும்.