For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

8-வது முறையாக கர்ப்பமான பெண்..!! குடும்ப கட்டுப்பாடு செய்ய சொன்னதால் தப்பியோட்டம்..!! வேலூரில் அதிர்ச்சி..!!

Knowing that this was Amuda's 8th delivery, the doctors advised Amuda to undergo family planning after delivery.
11:18 AM Nov 08, 2024 IST | Chella
8 வது முறையாக கர்ப்பமான பெண்     குடும்ப கட்டுப்பாடு செய்ய சொன்னதால் தப்பியோட்டம்     வேலூரில் அதிர்ச்சி
Advertisement

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே மேல்ஆலாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பிரசாந்த். இவரது மனைவி அமுதா (29). இவர்களுக்கு ஏற்கனவே 7 குழந்தைகள் இருந்த நிலையில், அதில் 2 குழந்தைகள் இறந்துவிட்டது. மீதமுள்ள 5 குழந்தைகளும் நலமாக உள்ளனர். குடும்ப வறுமையால் 100 நாள் வேலைக்குச் சென்று 5 குழந்தைகளையும் அமுதா கவனித்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில், அமுதா 8-வது முறையாக கர்ப்பமானார். இதையடுத்து, அருகில் உள்ள மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அமுதாவுக்கு கடந்த வாரம் நிறைவடைந்ததால், வேலூர் காக்கம்பாறை பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து, அமுதாவுக்கு இது 8-வது பிரசவம் என்பதை அறிந்த மருத்துவர்கள், அமுதாவை பிரசவத்திற்கு பின் குடும்பக்கட்டுப்பாடு செய்ய அறிவுறுத்தினர். குடும்ப கட்டுப்பாடு செய்ய விரும்பாத அமுதாவும், அவரது கணவரும் கடந்த 4ஆம் தேதி யாருக்கும் தெரியாமல் மருத்துவமனையில் இருந்து வெளியேறி வீட்டிற்கு சென்றனர். பின்னர், பிரசவ வார்டில் அமுதா இல்லாததைக் கண்டறிந்த மருத்துவர்கள், உடனடியாக மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, வட்டார மருத்துவ அலுவலர் செல்வி, கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார், செவிலியர்கள் விஜயகுமாரி, கலைவாணி, சுகாதார ஆய்வாளர் அஜித் ஆகியோர் கொண்ட குழுவினர் மேல்ஆலாங்குப்பம் கிராமத்துக்கு விரைந்தனர். குடும்ப சூழ்நிலை, நிதி நிலையை குறிப்பிட்டு அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அமுதாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு வந்து பிரசவத்துக்கு அனுமதித்தனர்.

Read More : ஜிம்மில் பெண்களுக்கு ஆண் பயிற்சியாளர்கள் பயிற்சி அளிக்க தடை..!! ஆண் டெய்லர்களுக்கும் தடை..!!

Tags :
Advertisement