72 வயதில், மூன்றாவது திருமணத்திற்கு ஆசைப்பட்ட முதியவர்; பாசமாக பழகிய காதலி செய்த காரியம்..
நவிமும்பை, ராய்கட் பகுதியைச் சேர்ந்தவர் 72 வயதான ராம்தாஸ் கெய்ரே. மும்பையில் உள்ள வங்கி ஒன்றில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், இரண்டு முறை திருமணம் செய்துள்ளார். ஆனால் அவரது இரண்டு மனைவிகளும் உயிரிழந்து விட்டனர். இதனால் அவர், தனது சொந்த ஊரான ராய்கட்டில் வாழ்ந்து வந்துள்ளார். தனியாக வாழ்ந்து வந்த இவருக்கு, கவிதா என்ற பெண் மீது காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரி திருமணம் செய்யாமல் சில மாதங்களாக லிவ் இன் முறையில் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். அப்போது, கவிதா ராம்தாஸை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனால் கவிதாவை நம்பிய ராம்தாஸ், அவருக்கு தங்க நகைகள் மற்றும் பணம் கொடுத்துள்ளார். பணம் மற்றும் நகைகளை பெற்றுக்கொண்ட கவிதா, மும்பைக்கு சென்று அங்குஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ராம்தாஸ், கவிதாவிடம் தான் கொடுத்த தங்க நகைகளை திரும்ப கொடுக்கும்படி கேட்டுள்ளார். இது குறித்து கவிதா தனது கணவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, கணவன் மனைவி இருவரும் சேர்ந்து ராம்தாஸை கொலை செய்ய திட்டமிட்டனர். அதன் படி, இருவரும் சேர்ந்து ராய்கட் சென்றுள்ளனர். ஆனால் கவிதா மட்டும் ராம்தாஸ் வீட்டிற்கு சென்ற நிலையில், அங்குஷ் அங்குள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கியுள்ளார். கவிதா ராம்தாஸிற்கு கொடுத்த சாப்பாட்டில் மயக்க மருந்து கலந்து கொடுத்துவிட்டார். இதனை சாப்பிட்ட ராம்தாஸ் மயக்கம் அடைந்தவுடன், அங்குஷ் அங்கு சென்று ராம்தாஸ் தலையில் பெரிய ஆயுதத்தால் அடித்து, கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக ராம்தாஸ் மொபைல் போன் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் சந்தேகம் அடைந்த அவரது மகன், அதே ஊரில் உள்ள தனது உறவினருக்கு போன் செய்து தனது தந்தையை பார்க்கும்படி கூறியுள்ளார். அங்கு சென்றபோது வீடு பூட்டி இருந்துள்ளது. இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கதவை திறந்து பார்த்தபோது உள்ளே ராம்தாஸ் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இந்நிலையில், போலீஸார் தீவிர விசாரணை நடத்திய போது, ராம்தாஸுடன் லிவ் இன் முறையில் வாழ்ந்த பெண் சமீபத்தில் அவரது வீட்டிற்கு வந்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அப்பெண்ணை தேடி மும்பையில் கண்டுபிடித்து, அவரையும் அவரது கணவரையும் கைது செய்தனர்.
Read more: ஒரே வீட்டில் தங்கிய காதலர்கள், மூன்றாவது மாடியில் செய்த காரியம்..