முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ரெடியா...? 6 முதல் 12-ம் வகுப்பு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு...!

05:30 AM Nov 20, 2023 IST | 1newsnationuser2
Advertisement

இது குறித்து பள்ளிகல்வி துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்; 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டிற்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளன. மாணவர்கள் நலன் கருதி, அதற்கான உத்தேச கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு டிசம்பர் 11-ம் தேதி தொடங்கி, 21-ம் தேதி தேர்வுகள் முடிவடைகின்றன. அதேபோல் 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு டிசம்பர் 7-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகின்றன. சிறப்பு குழு சார்பில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் இரண்டு விதமான கேள்வித் தாள்கள் தயாரிக்கப்பட உள்ளன. மேலும் இம்முறை மாநிலம் முழுவதும் ஒரே கேள்வித் தாள்களாக இருக்கும்.

மேலும், தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் வினாத்தாள் பதிவிறக்கம் செய்ய வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இதில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், 9, 10-ம் வகுப்புகளுக்கு மதியம் 2 மணி முதல் மாலை 4.30 வரையிலும் தேர்வானது நடைபெறவுள்ளது.

12-ம் வகுப்புக்கு காலை 9.30 மணி முதல் 09.40 வரையிலான 10 நிமிடங்கள் வினாத் தாள்களை படிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 09.40 முதல் 09.45 வரையிலான 5 நிமிடங்கள், விடைத்தாளைப் பூர்த்தி செய்யவும் நேரம் அளிக்கப்படும். அதன் பிறகு 09.45 மணியில் இருந்து மதியம் 12.45 மணி வரை தேர்வானது நடைபெறும். இதேபோல 11-ம் வகுப்புகளுக்கு மதியம் 01.15 முதல் மாலை 4.30 வரை தேர்வு நடைபெறும். இதில் 1.15 முதல் 1.30 வரை வினாத் தாள்களை படிக்கவும், விடைத்தாளை பூர்த்தி செய்யவும் நேரம் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

முழு விவரம் ; https://drive.google.com/file/d/1s73KR4HwXVVWTVjV9QCtk2dTx3SZH9Eb/view?usp=drivesdk

Tags :
examhalf yearly examschool students
Advertisement
Next Article