கணவர் இருக்கும் போதே, பெண்ணின் அந்த உறுப்பை தொட்ட நபர்; விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..
சென்னை மாவட்டம், புது வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் 35 வயதான மல்லிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வழக்கம் போல், இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, மர்ம நபர் ஒருவர் திடீரென வீட்டிற்குள் நுழைந்துள்ளார். தூங்கிக்கொண்டிருக்கும் பெண்ணை பார்த்த அவருக்கு, அந்தப் பெண் மீது ஆசை ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த மர்ம நபர், அந்தப் பெண்ணின் அருகில் சென்று அவரின் அந்தரங்க பகுதியை தொட்டு, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பதறிப்போய் எழுந்த அந்தப் பெண், சத்தம் போட்டு கத்தியுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு பதறிப்போய் எழுந்த அந்த பெண்ணின் கணவர், வீட்டிற்க்குள் நுழைந்த மர்ம நபரை பிடிக்க முயற்சி செய்துள்ளார்.
இதனால் சுதாரித்துக் கொண்ட அந்த மர்ம நபர், வீட்டின் கதவை வெளிப்புறமாக தாழிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனால் மனம் நொந்துப் போன அந்தப் பெண், நடந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளியை தேடி வந்தனர்.
இதையடுத்து, பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்தது அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த 32 வயதான சையது அப்துல் காதர் என்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் அஜர்ப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை, அவரது கணவர் இருக்கும் போதே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.