For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

த.வெ.க மாநாட்டில் கலந்து கொள்ள வந்த 6 த.வெ.க தொண்டர்கள் உயிரிழப்பு... தலைவர் விஜய் இரங்கல்...!

6 T.V.K. volunteers who came to participate in the conference lost their lives... President Vijay mourns
05:39 AM Oct 29, 2024 IST | Vignesh
த வெ க மாநாட்டில் கலந்து கொள்ள வந்த 6 த வெ க தொண்டர்கள் உயிரிழப்பு    தலைவர் விஜய் இரங்கல்
Advertisement

த.வெ.க மாநாட்டில் கலந்து கொள்ள வருகை புரிந்து உயிரிழந்த கட்சி தொண்டர்களுக்கு விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

த.வெ.க மாநாட்டில் கலந்து கொள்ள லட்சக்கணக்கானோர் வாகனங்கள் மூலம் வருகை புரிந்தனர். அதில் மாநாட்டிற்காக திருச்சியில் இருந்து வந்த கார் ஒன்று, சாலையில் இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில், 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.

Advertisement

இதே போல் சென்னை கீழ்பாக்கத்திலிருந்து சென்ற சார்லஸ் என்ற இளைஞருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் வாகனங்களில் சென்ற 32 பேர் பல்வேறு விபத்துகளில் சிக்கி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் உயிரிழந்த நபர்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில்; நமது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக, விக்கிரவாண்டி வி.சாலை நோக்கி வரும் போது, எதிர்பாராமல் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்த கழகத் தோழர்கள், வழக்கறிஞர் கில்லி VL.சீனிவாசன் ( திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணித் தலைவர்) JK.விஜய்கலை, (திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர்) வசந்தகுமார், கழகத் தோழர் ( பாரிமுனை, சென்னை )

ரியாஸ், கழகத் தோழர், ( பாரிமுனை, சென்னை) உதயகுமார், கழகத் தோழர்,( செஞ்சி) மற்றும் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சார்லஸ் கழகத் தோழர், ( வில்லிவாக்கம்,சென்னை) ஆகியோர் இன்று நம்மிடையே இல்லை என்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. ஈடு செய்யவே இயலாத, தாங்கொணா இத்துயரில் இருந்து வெளிவரவே இயலாமல் மனம் தவிக்கிறது. கழகத்திற்காக இவர்கள் ஆற்றிய பணிகள் கழக வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.

கழகத் தோழர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன். மேலும், சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கழகத் தோழர்கள் விரைவில் முழுவதும் குணமடைந்து, வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement