முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ரூ.12,343 கோடி மதிப்புள்ள 100 சதவீத மத்திய அரசு நிதியுதவியுடன் 6 திட்டங்களுக்கு ஒப்புதல்...!

09:07 AM Feb 14, 2024 IST | 1newsnationuser2
Advertisement

மத்திய அரசின் 100 சதவீத நிதியுதவியுடன் ரூ.12,343 கோடி மொத்த மதிப்பீட்டிலான ரயில்வே அமைச்சகத்தின் 6 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால் பல கண்காணிப்புத் திட்டங்கள் செயல்பாடுகளை எளிதாக்கும் மற்றும் நெரிசலைக் குறைக்கும். இந்திய ரயில்வேயின் பரபரப்பான பிரிவுகளில் மிகவும் தேவையான உள்கட்டமைப்பு வளர்ச்சியை வழங்கும். புதிய இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இந்தத் திட்டங்கள் உள்ளன. இது பிராந்தியத்தில் உள்ள மக்களை "தன்னிறைவாக" மாற்றும், இது அவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும்.

Advertisement

ராஜஸ்தான், அசாம், தெலங்கானா, குஜராத், ஆந்திரப் பிரதேசம், நாகாலாந்து ஆகிய 6 மாநிலங்களில் உள்ள 18 மாவட்டங்களை உள்ளடக்கிய 6 திட்டங்கள் தற்போதுள்ள இந்திய ரயில்வேயின் கட்டமைப்பை 1020 கிலோமீட்டர் அளவுக்கு அதிகரிக்கும். இந்தத் திட்டங்கள் பிரதமரின் விரைவு சக்தி தேசியப் பெருந்திட்டத்தின் விளைவாக உருவானவை. இவை ஒருங்கிணைந்த திட்டமிடல் மூலம் சாத்தியமாகியுள்ளன. இவை உணவு தானியங்கள், உணவுப் பொருட்கள், உரங்கள், நிலக்கரி, சிமெண்ட், இரும்பு, எஃகு, சாம்பல், கிளிஞ்சல், சுண்ணாம்புக்கல், சரக்குப் பெட்டகம் போன்ற பொருட்களைக் கொண்டு செல்வதற்கான அத்தியாவசிய வழித்தடங்கள் ஆகும்.

திறன் விரிவாக்கப் பணிகளின் விளைவாக ஆண்டுக்கு 87 மில்லியன் டன் அளவுக்கு கூடுதல் சரக்கு போக்குவரத்து ஏற்படும். ரயில்வே, சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், எரிசக்தித் திறன்மிக்க போக்குவரத்து முறையாகவும் இருப்பதால், நாட்டின் சரக்குப் போக்குவரத்து செலவைக் குறைப்பதற்கும், எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதற்கும், கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும் உதவும்.

Tags :
central govtmodirailwayrailway jobs
Advertisement
Next Article