முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சைக்கிள் ஓட்டும்போது இதை செய்யக்கூடாது!. 6 மாதம் சிறை!. புதிய சட்டத்தை போட்ட நாடு!

6 months in jail if you use a mobile phone while riding a bicycle! The country put a new law!
06:06 AM Nov 04, 2024 IST | Kokila
Advertisement

Bicycle: ஜப்பானில் சைக்கிள் ஓட்டும் போது மொபைல் பயன்படுத்தினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

ஜப்பானில் உள்ள மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் சைக்கிள் போக்குவரத்தையே பெரிதும் விரும்புகின்றனர். கோவிட் தொற்றுக்கு பிறகு, சைக்கிள் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. கடந்த சில தினங்களாக, சைக்கிள் ஓட்டும்போது கவனக்குறைவால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்தது.

கடந்த ஆண்டு மட்டும் 72 ஆயிரம் சைக்கிள் விபத்துக்கள் நடந்துள்ளன. இது நாடு முழுவதும் ஏற்படும் மற்ற வாகன வாகன விபத்துகளில் 20 சதவீதம் ஆகும். சைக்கிள் விபத்துக்களை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து அரசு ஆலோசனை நடத்தியது. சைக்கிள் ஓட்டும் போது பெரும்பான்மையினர் மொபைல் பயன்படுத்துவதால் விபத்து அதிக அளவு நேரிடுகிறது. இதுதான் விபத்துக்கு முக்கியமான காரணம் என தெரிய வந்தது. இதனால், போக்குவரத்து விதிகளில் புதிய திருத்தங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி சைக்கிள் ஓட்டும்போது மொபைல் பேசவோ, இணையத்தை பயன்படுத்தவோ கூடாது. இதனை மீறுபவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை அல்லது சுமார் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். மது போதையில் சைக்கிள் ஓட்டினாலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது சுமார் ரூ.2¾ லட்சம் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு போக்குவரத்து விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

Readmore: ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் கையெறி குண்டுத் தாக்குதல்!. 12 பேர் காயம்!. லஷ்கர்-இ-தொய்பா தளபதி சுட்டுக்கொலை!

Tags :
6 months in jailbicyclejapanMobile usenew law
Advertisement
Next Article