For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அண்ணாமலை இடத்திற்கு 6 பேர் கொண்ட குழு நியமனம்..!! பாஜக தலைமை அறிவிப்பு..!!

While BJP state president Annamalai has gone to London for further studies, the party leadership has appointed a 6-member committee to carry out party work.
01:32 PM Aug 30, 2024 IST | Chella
அண்ணாமலை இடத்திற்கு 6 பேர் கொண்ட குழு நியமனம்     பாஜக தலைமை அறிவிப்பு
Advertisement

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்படிப்பிற்காக லண்டன் சென்றுள்ள நிலையில், கட்சிப் பணிகளை மேற்கொள்ள 6 பேர் கொண்டக் குழுவை அக்கட்சி தலைமை நியமித்துள்ளது.

Advertisement

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை செயல்பட்டு வருகிறது. இவர், தனது மேற்படிப்பிற்காக இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ளார். லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 3 மாதங்கள் (செப்டம்பர், அக்டோபர், நவம்பர்) படிக்க உள்ளார். பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பில் இருக்கும் அண்ணாமலை, 3 மாத காலம் அரசியலில் இருந்து விலகி இருப்பதால், தமிழ்நாட்டில் கட்சிப் பணிகளை கவனிக்க 6 பேர் கொண்ட கமிட்டி நியமிக்கப்பட்டுள்ளது.

அந்த கமிட்டியின் தலைவராக H.ராஜா உள்ளார். மேலும், M.சக்கரவர்த்தி , P.கனகசபாபதி, M.முருகானந்தம், ராம சீனிவாசன், S.R.சேகர் ஆகியோர் கமிட்டியின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் கட்சி சார்பான முக்கிய முடிவுகளை இந்த 3 மாதத்திற்கு மேற்குறிப்பிட்ட 6 பேரும் ஆலோசித்து முடிவெடுப்பார்கள்.

இந்த உறுப்பினர்கள் தமிழ்நாட்டில் தங்கள் கட்சி பணிகளை மண்டல வாரியாக பிரித்து செயலாற்றுவார்கள் என்றும், ஒவ்வொரு நபருக்கும் 1 அல்லது 2 மண்டலங்கள் ஒதுக்கப்படும் என்றும் யார் யாருக்கு எந்த மண்டலம் என குழு தலைவர் H.ராஜா முடிவு செய்வார் என கட்சித் தலைமை செயலதிகாரி அருண் சிங் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Read More : எனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து புகாரளித்தேன்.!! நடிகர் சங்கம் ஒன்னுமே செய்யல..!! நடிகை விசித்ரா பகீர் தகவல்..!!

Tags :
Advertisement