முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தமிழ்நாட்டில் 6.27 கோடி வாக்காளர்கள்..!! இந்த லிஸ்டில் உங்கள் பெயர் இல்லையா..? என்ன செய்ய வேண்டும்..?

The Election Commission has announced that there are a total of 6.27 crore voters in Tamil Nadu.
02:43 PM Oct 29, 2024 IST | Chella
Advertisement

தமிழ்நாட்டில் மொத்தம் 6.27 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Advertisement

தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள தொகுதி வாரியாக வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் www.elections.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 6.27 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.07 கோடியாகவும், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.19 கோடியாகவும் உள்ளது. இதன்மூலம் ஆண்களை விட பெண்களே அதிகம் உள்ளனர். 3ஆம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை என்பது 8,964 என்று உள்ளது.

அதேபோல் ஒரு தொகுதியில் அதிகபட்ச வாக்காளர்கள் உள்ளனர் என்றால் அது சோழிங்கநல்லூரில் தான். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் தொகுதியில் மொத்தம் 6.76 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 3.38 லட்சமாகவும், பெண் வாக்காளர்கள் 3.37 லட்சமாகவும், 3ஆம் பாலினத்தவர்கள் 125 பேரும் உள்ளனர்.

குறைந்த வாக்காளர்கள் என்றால் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டசபை தொகுதியில் தான் உள்ளனர். இந்த தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1.73 லட்சம் ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் 85,065 ஆகவும், பெண் வாக்காளர்கள் 88,162 ஆக உள்ளது. 3ஆம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 3ஆகவும் உள்ளது.

சென்னையை பொறுத்தவரை ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகளில் 19.41 லட்சம் ஆண்கள், 20.09 லட்சம் பெண் வாக்காளர்கள் உள்ளனர். சென்னையில் மொத்தம் 39,52,498 வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இன்று வெளியான வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது.

அதில், பொதுமக்கள் பார்த்து தங்களின் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம். ஒருவேளை பெயர் விடுபட்டு இருந்தால் 16.11.2024, 17.11.2024, 23.11.2024, 24.11.2024 உள்ளிட்ட தேதிகளில் வாக்குச்சாவடிகளில் நடக்கும் சிறப்பு முகாம்களில் பங்கேற்று பெயரை சேர்த்துக் கொள்ளலாம். அதேபோல் 2025 ஜனவரியில் 18 வயதை எட்ட உள்ளவர்களும் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யவும், திருத்தம் செய்யவும் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ளலாம்.

Read More : திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தும் விஜய்..!! தவெகவை நம்பி கூட்டணி கட்சிகள் வருவது கேள்விக்குறிதான்..!! திருமா அட்டாக்..!!

Tags :
சென்னைதமிழ்நாடுதேர்தல் ஆணையம்வாக்காளர் பட்டியல்
Advertisement
Next Article