12 வயது சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை… 58 வயது முதியவருக்கு 42 மாத சிறை.!
விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முதியவர் ஒருவருக்கு 42 மாதம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறது நீதிமன்றம். 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற வழக்கு தொடர்பாக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது .
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் புது காலணி பகுதியைச் சேர்ந்தவர் பாவாடை. 58 வயதான இவர் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தெரிகிறது .
இது தொடர்பாக சிறுமி அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இவருக்கு எதிராக புகார் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த காவல்துறையினர் இவர் மீது சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். தற்போது இந்த வழக்கு விசாரணை முடிந்து நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது.
அந்தத் தீர்ப்பின்படி சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பாவாடை என்ற 58 வயது நபருக்கு 42 மாதம் சிறை தண்டனை வழங்கி விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. மேலும் சிறுமிக்கு 1.50 லட்ச ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் எனவும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் அபராதமாக ஆயிரம் ரூபாயும் அவருக்கு விதித்து தீர்ப்பளித்து இருக்கிறார் நீதிபதி.