For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'500 மனைவிகளுடன் வாழ்ந்த கொடூர பேரரசன்' இன்றும் இவர் DNA ஒன்றரை கோடி மக்கள் இரத்தத்தில் இருக்காம்!

The cruel emperor who lived with 500 wives, even today his DNA is in the blood of one and a half million people
04:59 PM Jun 06, 2024 IST | Mari Thangam
 500 மனைவிகளுடன் வாழ்ந்த கொடூர பேரரசன்  இன்றும் இவர் dna ஒன்றரை கோடி மக்கள் இரத்தத்தில் இருக்காம்
Advertisement

உலக வரலாற்றின் தவிர்க்க முடியாத ஆட்சியாளர்களில் மங்கோலிய பேரரசர் செங்கிஸ்கானும் ஒருவர். 13-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான ஒட்டுமொத்த உலகையே நடுங்க வைத்தார்.. ஆம்.. படையெடுத்து சென்ற இடங்கள் எல்லாம் பேரழிவையும், கடுமையான உயிர் சேதங்களையும் ஏற்படுத்திய செங்கிஸ்கான் அதன் மூலம் பல நகரங்களையும் தேசங்களையும் தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்.

Advertisement

ஆனால் அதற்காக பல நாடுகளில் ரத்த ஆற்றை ஓடவிட்டு, எதிரிகளின் தலையை துண்டித்து மலையாக குவித்தார்.. மேலும் இவர் செய்த செயல்களின் உலகின் கொடூர மன்னர்களில் ஒருவராக மாற்றியது. எனவே உலகில் அதிகளவில் மக்களை கொன்று குவித்த அரசனாகவும் அவ்ர் அறியப்படுகிறார்..

மங்கோலிய பேரரசர் செங்கிஸ்கானின் வெற்றி போர்க்களத்தோடு நின்றுவிடவில்லை.. மற்றொரு களத்திலும் அவர் செய்த செயல் ஆச்சர்யமளிப்பதாக உள்ளது.. ஆம்.. கிழக்கு மங்கோலியா எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே சில ஆண்டுகளுக்கு முன்னர் மரபணு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.. இதில் சுமார் 8% ஆண்களின் Y குரோமோசோம்களில் மங்கோலிய ஆட்சியாளர்களின் குடும்பத்தின் தடயங்கள் உள்ளது தெரியவந்தது.

அதாவது உலக ஆண்களில் 0.5% செங்கிஸ்கானின் பரம்பரயினர் என்று அந்த ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.. அதாவது மத்திய ஆசியாவில் மட்டும் 16 மில்லியன் ஆண்கள் அவரது சந்ததியினர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மங்கோலியா மட்டுமின்றி பாகிஸ்தானில் ஹஜாரா பழங்குடியினப் பகுதியில் வசிக்கும் மக்களின் மரபணுக்களிலும் இதுபோன்ற தடயங்கள் தென்படுகின்றன. அந்த மக்களும் தாங்கள் மங்கோலிய இனத்தை சேர்ந்தவர்கள் என்றே தங்களை அடையாளப்படுத்துகின்றனர். இதைத் தவிர, முகல், சுக்தாய் மற்றும் மிர்ஸா போன்ற குடும்பப் பெயர்களைக் கொண்ட மக்களும் மங்கோலிய இனத்தை சேர்ந்தவர்களாக கூறுகின்றனர். ஆசியா மற்றும் ரஷ்யாவின் சில ஆளும் வம்சங்களும் செங்கிஸ்கானின் வழிதோன்றலாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது..

செங்கிஸ்கானுக்கு 500-க்கும் மேற்பட்ட மனைவிகள் இருந்ததாக கூறப்படும் நிலையில், அவரின் மனைவிகள் எண்ணிக்கை எத்தனை என்பதை சரியாக கணிக்க முடியவில்லை.. அவர்களில் 6 பேர் மட்டுமே மங்கோலியர்களாக இருந்தனர்.. மற்ற அனைவரும் எதிரி நாட்டு மன்னர்களின் மனைவிகள் என்று கூறப்படுகிறது.. ஒவ்வொரு நாட்டை வெல்லும் போதும் அங்கிருக்கும் பெண்களை கவர்ந்து வந்து திருமணம் செய்து கொள்வாராம்..

எனினும் அவரின் முதன்மையான மனைவியாக இருந்த போர்டே என்பவருக்கு பிறந்தவர்களே மங்கோலிய ராஜ்ஜியத்தின் வாரிசுகளாக கருதப்பட்டனர்.. இன்று செங்கிஸ்கானின் வழிதோன்றல்கள் கோடிக்கணக்கில் இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.. அதாவது ஐரோப்பா மற்றும் ஆசியாவில் 200 பேரில் ஒருவர் செங்கிஸ்கானின் வம்சத்தை சேர்ந்தவராக இருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர்..

Tags :
Advertisement