இந்திய வனப்பணி.. UPSC முதன்மை தேர்வு, 2024 முடிவுகள் வெளியீடு...! எப்படி பாதுகாப்பது...?
மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்திய இந்திய வனப்பணி (முதன்மை) தேர்வு, 2024 முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2024 நவம்பர் 24 முதல் டிசம்பர் 01 வரை மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்திய இந்திய வனப்பணி (முதன்மை) தேர்வு, 2024 முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், இந்திய வனப்பணித் தேர்வு, 2024-க்கான ஆளுமைத் தேர்வுக்கு (நேர்காணல்) தகுதி பெற்றுள்ளவர்களின் பதிவு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களின் தகுதி / இட ஒதுக்கீடு கோரிக்கைகளுக்கு ஆதரவாக அசல் சான்றிதழ்களான வயது, கல்வித் தகுதி, சமூகம், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர், மாற்றுத்திறனாளி போன்றவற்றுக்கான ஆவணங்களை ஆளுமைத் தேர்வின் (நேர்காணல்) போது சமர்ப்பிக்க வேண்டும்.
எஸ்சி, எஸ்டி,ஓபிசி, இடபிள்யூஎஸ், மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர் போன்ற பிரிவுகளுக்கு கிடைக்கும் இடஒதுக்கீடு மற்றும் தளர்வு பலன்களை விரும்பும் விண்ணப்பதாரர்கள், இந்திய வனப்பணி தேர்வு, 2024 விண்ணப்பத்தின் இறுதி தேதிக்குள் அல்லது அதற்கு முன்னர் வழங்கப்பட்ட அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பதாரர்களின் ஆளுமைத் தேர்வு (நேர்காணல்) தேதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும், இது தோல்பூர் ஹவுஸ், ஷாஜகான் சாலை, டெல்லி -110069 என்ற முகவரியில் உள்ள மத்திய பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.
ஆளுமைத் தேர்வுக்கான மின்னணு அழைப்பாணை கடிதங்கள் உரிய நேரத்தில் கிடைக்கும், அவற்றை ஆணையத்தின் இணையதளத்திலிருந்து https://www.upsc.gov.in&https://www.upsconline.in பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பதிவிறக்கம் செய்ய இயலாத விண்ணப்பதாரர்கள் உடனடியாக கடிதம் மூலமாகவோ அல்லது 011-23385271, 011-23381125, 011-23098543 என்ற தொலைநகல் மூலமாகவோ அல்லது 011-23387310, 011-23384472 என்ற தொலைநகல் மூலமாகவோ அல்லது soexam9-upsc[at]nic[dot]in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தேர்வு ஆணைய அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.
விண்ணப்பதாரர்களுக்கு அறிவிக்கப்படும் நேர்முகத் தேர்வின் (நேர்காணல்) தேதி மற்றும் நேரத்தை மாற்றுவதற்கான எந்த கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அனைத்து மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களும் இறுதி முடிவு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள் தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.