For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலில் மீண்டும் இடம்பெறப்போகும் 5 சிட்டிங் எம்பிக்கள்..!! இவர்கள்தான் அது..!!

10:41 AM Mar 21, 2024 IST | 1newsnationuser6
காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலில் மீண்டும் இடம்பெறப்போகும் 5 சிட்டிங் எம்பிக்கள்     இவர்கள்தான் அது
Advertisement

லோக்சபா தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் எந்த நேரத்திலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கரூர் ஜோதிமணி உள்ளிட்ட 5 சிட்டிங் எம்.பிக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்பது காங்கிரஸ் கட்சியினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement

ஜோதிமணி (கரூர்)

இளம் வயதிலேயே அரசியலில் ஈடுபட்டவர். ராகுல் காந்திக்கு மிக நெருக்கமான இளம் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர். 2011இல் கரூர் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டார் ஜோதிமணி. அத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட செந்தில் பாலாஜியிடம் தோல்வியைத் தழுவினார். 2014 லோக்சபா தேர்தலில் கரூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக, அதிமுகவின் தம்பிதுரையை எதிர்த்துப் போட்டியிட்டார். அத்தேர்தலிலும் தோல்வியடைந்தார். ஆனால், 2019 லோக்சபா தேர்தலில் 63.06% வாக்குகளைப் பெற்று அதிமுகவின் தம்பிதுரையை வீழ்த்தினார். சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தம்பிதுரையை தோற்கடித்தார் ஜோதிமணி.

மாணிக்கம் தாகூர் (விருதுநகர்)

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமைக்கு மிக நெருக்கமானவர். பல்வேறு மாநிலங்களின் தேர்தல் பொறுப்பாளராகப் பணியாற்றியவர். தெலங்கானாவில் காங்கிரஸ் முதல் முறையாக ஆட்சி அமைத்ததில் மாணிக்கம் தாகூரும் முக்கிய பங்கு வகித்தார். 2009 விருதுநகர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்பியானார். 2014 தேர்தலில் அதிமுகவின் ராதாகிருஷ்ணனிடம் தோல்வியடைந்தார். 2019இல் மீண்டும் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு எம்பியானார்.

கார்த்தி சிதம்பரம் (சிவகங்கை)

இந்திரா, ராஜீவ் காந்தி காலத்து மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். 2014 லோக்சபா தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு அதிமுகவின் செந்தில்நாதனிடம் தோல்வியடைந்தார். 2019 லோக்சபா தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வென்றார். மகன் கார்த்தி சிதம்பரம் லோக்சபா எம்பியாகவும் தந்தை ப.சிதம்பரம் ராஜ்யசபா எம்பியாகவும் பதவி வகிக்கின்றனர்.

விஜய் வசந்த் (கன்னியாகுமரி)

பிரபல தொழிலதிபரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ஹெச்.வசந்தகுமாரின் மகன் தான் விஜய் வசந்த். திரைப்பட நடிகராக இருந்த விஜய் வசந்த், தந்தை வசந்தகுமார் மறைவால் அரசியலுக்கு வந்தார். 2021 கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்று எம்பியானவர் விஜய் வசந்த்.

செல்லக்குமார் (கிருஷ்ணகிரி)

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் டாக்டர் செல்லக்குமார். சென்னை அண்ணா நகர், தியாகராயர் நகர் சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக பணியாற்றியவர். 2019 கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வென்றார். காங்கிரஸ் கட்சியிலும் மூப்பனார் தொடங்கிய தமிழ் மாநில காங்கிரஸிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.

Read More : பரபரப்பு..!! அதிமுக மாஜி அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு..!! ஜி ஸ்கொயர் நிறுவனத்திலும் ரெய்டு..?

Advertisement