For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

40,000 மாணவர்கள் தேர்வுக்கே வராமல் ஆப்சென்ட்..!! ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு..!!

08:05 AM May 03, 2024 IST | Chella
40 000 மாணவர்கள் தேர்வுக்கே வராமல் ஆப்சென்ட்     ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு
Advertisement

தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தில், 10ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் மதிப்பீடு நடைபெற்று முடிந்துள்ளது. வரும் மே 6ஆம் தேதி 12ஆம் வகுப்புக்கும், 10ஆம் தேதி பத்தாம் வகுப்பும், 14ஆம் தேதி 11ஆம் வகுப்புக்கும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Advertisement

இந்நிலையில், 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சுமார் 40,000 மாணவர்கள் தேர்வுக்கே வராமல் ஆப்சென்ட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், 'ஆப்சென்ட்' ஆன, 40,000 மாணவர்களை, வீடு தேடிச் சென்று பேசி, துணை தேர்வில் பங்கேற்க வைக்க வைக்கும்படி, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியானதும், துணை தேர்வு தேதி அறிவிக்கப்படும்.

இதையடுத்து, எதிர்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பல அரசு பள்ளிகள் காலாவதி ஆகின்ற நிலையில் தான் உள்ளது. சமீபத்தில் மழை பெய்ததால் பள்ளி சுவர் இடிந்து விழுந்தது. இன்னும் சில பள்ளிகளில் கூரையில் இருந்து மழை ஒழுகியதால் மாணவர்கள் தங்கள் சாப்பிடும் தட்டுகளை தலைமேல் வைத்து பாடம் படிக்கின்ற காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பார்க்கும்போது நம் நெஞ்சு பதைபதைக்கிறது. இதையெல்லாம், பார்க்கும்போது நம் தமிழகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது இந்த திராவிட ஆட்சியில் என்றுதான் கேள்வி எழுகிறது என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Read More : குணா குகை பிளான் திடீர் ரத்து..!! அவசர அவசரமாக இன்றே சென்னை திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்..!!

Advertisement