பெண்களே கவனம்!! இயற்க்கை உபாதை கழிக்க சென்ற 40 வயது பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்...
இராமநாதபுரம் மாவட்டம், புத்தேந்தல் கிராமத்தில், 40 வயதான பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள தண்டவாளப் பகுதிக்கு இயற்க்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று, அந்த பெண் தனியாக வருவதை நோட்டமிட்டுள்ளனர். இதையடுத்து, அவர்கள் அந்த பெண்ணிடம் சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் அவர் கதறி துடித்துள்ளார். ஆனால் அங்கு ஆள் நடமாட்டம் இல்லாததால், யாரும் அவரை காப்பாற்ற முடியவில்லை. இதையடுத்து, அந்த கும்பல் அவரை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் இராமநாதபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பெண்ணை பலாத்காரம் செய்தது புவனேஷ், முருகன், செல்வகுமார், குட்டி என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசார் நான்கு போரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, அடுத்தடுத்து நடைபெறும் பலாத்கார சம்பவங்கள் மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தி உள்ளது.
Read more: தமிழகத்தில் உதயமாகிறது 13 புதிய நகராட்சிகள்..!! – தமிழக அரசு அரசாணை வெளியீடு