முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தமிழ்நாட்டில் புதிதாக உருவாகும் 4 மாநகராட்சிகள்..!! உங்க பகுதியும் இந்த லிஸ்ட்ல இருக்கான்னு பாருங்க..!!

05:31 PM Mar 22, 2024 IST | 1newsnationuser6
Advertisement

தமிழ்நாட்டில் மேலும் 4 புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என்று சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. அதன்படி, புதிதாக உருவாக்கப்பட உள்ள காரைக்குடி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, நாமக்கல் மாநகராட்சிகளில் சேர்க்கப்பட உள்ள கிராம ஊராட்சிகளின் விவரம் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

நாமக்கல் மாநகராட்சி :

நாமக்கல் நகராட்சி உடன் வகுரம்பட்டி, வசந்தபுரம், வேட்டம்பாடி, வள்ளிப்புரம், ரெட்டிப்பட்டி, வீசாணம், பாப்பிநாயக்கன்பட்டி, சலுவம்பட்டி, தொட்டிப்படி, மசூர்பாடி, லத்துவாடி, காதப்பள்ளி ஆகிய கிராம ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சி உருவாக்கப்பட உள்ளது.

காரைக்குடி மாநகராட்சி :

காரைக்குடி மாநகராட்சியில் கண்டனூர், கோட்டையூர் பேரூராட்சிகளும், சங்காபுரம், கோவிலூர், இலுப்பக்குடி, அரியக்குடி, தளக்காவூர் ஆகிய கிராம ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சி உருவாக்கப்பட இருக்கிறது.

திருவண்ணாமலை மாநகராட்சி :

திருவண்ணாமலை நகராட்சி உடன் வேங்கிக்கால், சின்னகாங்கேயனூர், கீழ்நாச்சிப்பட்டு, நொச்சிமலை, ஏந்தல், தென் மாத்தூர், கீழ்கசராப்பட்டு, சாவல்பூண்டி, நல்லவன் பாளையம், அடி அண்ணாமலை, தேவனந்தல், ஆடையூர், துர்க்கை நம்மியந்தல், கனந்தம் பூண்டி, ஆணாய்பிறந்தான், அந்தியந்தால், மலப்பாம்பாடி ஆகிய ஊராட்சிகளும், அடி அண்ணாமலை பாதுகாக்கப்பட்ட காடுகள் பகுதிகளையும் இணைத்து புதிய மாநகராட்சி உருவாக்கப்பட இருக்கிறது.

புதுக்கோட்டை மாநகராட்சி :

புதுக்கோட்டை நகராட்சியுடன், திருக்கட்டளை, திருவேங்கைவாசல், வாகவாசல், திருமலைராய சமுத்திரம், கவிநாடு கிழக்கு, கவிநாடு மேற்கு, தேக்காட்டூர், 9ஏநந்தம்பண்ணை, 9பி நந்தம்பண்ணை, வெள்ளனூர், முள்ளூர் கிராம ஊராட்சிகள், கஸ்பா காடுகள் மேற்கு பகுதி ஆகியவற்றை இணைத்து புதுக்கோட்டை மாநகராட்சி உருவாக்கப்பட உள்ளது.

Read More : அதிமுக கூட்டணி உடைகிறது..? போட்டியிட வாய்ப்பு கொடுக்காததால் அதிருப்தி..!! 2 நாட்களில் முடிவு அறிவிப்பு..!!

Advertisement
Next Article