For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

புதிய அமைச்சர்களாக 4 பேர் இன்று பதவியேற்பு!. யாருக்கு எந்தெந்த இலாக்கா?

4 new ministers sworn in today! Who has which folder?
06:00 AM Sep 29, 2024 IST | Kokila
புதிய அமைச்சர்களாக 4 பேர் இன்று பதவியேற்பு   யாருக்கு எந்தெந்த இலாக்கா
Advertisement

TN Cabinet: ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்ததையடுத்து, செந்தில் பாலாஜி உள்பட 4 பேர் அமைச்சர்களாக இன்று பதவியேற்கவுள்ளனர்.

Advertisement

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டு அவர் வெளியே வந்துள்ளநிலையில், மீண்டும் அமைச்சராக பதவி வகிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கக்கோரி தமிழக ஆளுநர் ரவிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆளுநர் ஒப்புதல் அளித்ததையடுத்து, துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் உட்பட 4 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சராகவும் மற்றும் தற்போதுள்ள இலாகாக்களுடன் கூடுதலாக திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வி.செந்தில்பாலாஜி, கோவி செழியன், ஆர்.ராஜேந்திரன், எஸ்.எம்.நாசர் ஆகியோர் புதிதாக அமைச்சர்களாக இன்று பதவியேற்கின்றனர்.

நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களின் பதவியேற்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணி அளவில் சென்னை ராஜ்பவனில் நடைபெறுவுள்ளது. மேலும், பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டி.மனோ தங்கராஜ், சிறுபான்மையினர் நலம் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கே. ராமச்சந்திரன், ஆகியோரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்ததற்கும், ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வனத்துறை அமைச்சராக மாற்றப்படுகிறார். சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்படுகிறார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், மனிதவள மேம்பாடு மற்றும் முன்னாள் படைவீரர்கள் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வனத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தனுக்கு, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பால்வளம், காதி, கிராமத் தொழில்கள் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வசமிருந்த மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு பதிலாக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்ட கே.ராமச்சந்திரனுக்கு அரசு கொறடா பொறுப்பு வழங்கப்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Readmore: இன்று முதல் வானில் தெரியும் அதிசயம்..!! இரண்டு நிலா..!! வெறும் கண்களால் பார்க்க முடியுமா..? நேரம் என்ன..?

Tags :
Advertisement