முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

3-வது முறையாக தாமதமாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!! காத்திருக்கும் பேராபத்து..? வானிலை ஆய்வு மையம் வார்னிங்..!!

The depression has been delayed for the 3rd time.
11:24 AM Nov 11, 2024 IST | Chella
Advertisement

வங்கக்கடலில் கடந்த 2 நாட்களாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து வந்தது. ஆனால், கடந்த 3 முறையும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவில்லை. 7, 8ஆம் தேதிக்குள் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகாமல் தாமதமானது.

Advertisement

தொடர்ந்து 9, 10ஆம் தேதிக்குள் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்போதும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகாமல் தாமதமானது. 2 முறை தாமதமான நிலையில், இன்று இரவுக்குள் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. அதாவது, மியான்மர் கடல் பகுதியிலுள்ள காற்று சுழற்சி, வடகிழக்கு காற்றை தடை செய்வதன் மூலம் இந்த தாமதம் ஏற்பட்டு வருவதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காற்றழுத்த தாழ்வு நிலை 3-வது முறையாக தாமதமாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று இரவுக்குள் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று சென்னை வானிலை மையம் கணித்திருந்தது. அடுத்த 36 மணி நேரத்திற்குள் அதாவது 11, 12ஆம் தேதிக்குள் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More : சுனிதா வில்லியம்ஸுக்கு என்ன ஆச்சு..? எலும்பும் தோலுமாக காட்சியளிக்கும் பரிதாபம்..!! நாசா வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்..!!

Tags :
Cycloneஇந்திய வானிலை ஆய்வு மையம்கனமழைவானிலை ஆய்வு மையம்
Advertisement
Next Article