ஆகஸ்ட் 3ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் அறிவிப்பு..!!
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி சனிக்கிழமை அன்று திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகில் மேலப்பாளையம் என்ற சிற்றூரில் ரத்னசாமி கவுண்டர் – பெரியாத்தா தம்பதியருக்கு 1756 ஏப்ரல் 17ஆம் தேதி மகனாகப் பிறந்தவர் தீரன் சின்னமலை. தீர்த்தகிரி என்னும் இயற்பெயர் கொண்ட இவர், இளம் வயதிலேயே வாள்பயிற்சி, வில் பயிற்சி, சிலம்பாட்டம், மல்யுத்தம், தடிவரிசை போன்ற போர்க்கலைகளை கற்றுக்கொண்டார்.
மைசூர் மன்னன் திப்பு சுல்தானுடன் இணைந்து, ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவை மீட்க பல புதிய போர் யுக்திகளைக் கையாண்டு போராடினார். பல போர்களில் தோல்வியடைந்த ஆங்கிலேயர்கள், ஆத்திரமடைந்து தீரன் சின்னமலையை சூழ்ச்சி செய்து அவரையும், அவரது சகோதரர்களையும் சங்ககிரிக் கோட்டையில் 1805 ஆம் ஆண்டு ஜூலை 31 அன்று தூக்கிலிட்டனர்.
அத்தகைய புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 218-ஆவது நினைவு நாளான 3.8.2024ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : வயநாடு நிலச்சரிவு..!! வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கும் உடல்கள்..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!