முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதி திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி...!

06:55 AM Dec 14, 2023 IST | 1newsnationuser2
Advertisement

பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு 2016 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை 3,536 கோடியே 92 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisement

நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி; 2016 - 2017 நிதியாண்டில் 690 கோடியே 59 லட்சம் ரூபாயும், 2017 -2018 நிதியாண்டில் 848 கோடியே 48 லட்சம் ரூபாயும், 2018 -2019 நிதியாண்டில் 502 கோடியே 79 லட்சம் ரூபாயும், 2019 -2020 நிதியாண்டில் 487 கோடியே 52 லட்சம் ரூபாயும், 2020 – 2021 நிதியாண்டில் 78 கோடியே 62 லட்சம் ரூபாயும், 2021 – 2022 நிதியாண்டில் 928 கோடியே 92 லட்சம் ரூபாயும் மத்திய அரசின் பங்காக தமிழ்நாட்டிற்கு பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ளது.

சமூக பொருளாதார பிரிவுவாரி கணக்கெடுப்பு 2011-ன்படி தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, 3,71,382 சுவரும், கூரையும் உள்ள வீடுகளும், 4,45,459 சுவர் மட்டும் உள்ள வீடுகளும், 18,63,373 கூரை மட்டும் உள்ள வீடுகள் என மொத்தம் 26 லட்சத்து 80 ஆயிரத்து 214 குடிசை வீடுகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.அதே போல் புதுச்சேரியில் 9,655 சுவரும், கூரையும் உள்ள வீடுகளும், 12,499 சுவர் மட்டும் உள்ள வீடுகளும், 37,534 கூரை மட்டும் உள்ள வீடுகளும் என மொத்தம் 59,688 குடிசை வீடுகள் உள்ளதாக கூறினார் ‌

Tags :
central govtfundHouse schemeTamilanadu
Advertisement
Next Article