For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டில் 30 பேர் ஜேஎன்.1 கொரோனாவால் பாதிப்பு..!! முகக்கவசம் கட்டாயம்..!! அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை..!!

07:50 AM Jan 04, 2024 IST | 1newsnationuser6
தமிழ்நாட்டில் 30 பேர் ஜேஎன் 1 கொரோனாவால் பாதிப்பு     முகக்கவசம் கட்டாயம்     அமைச்சர் மா சுப்பிரமணியன் எச்சரிக்கை
Advertisement

தமிழ்நாட்டில் உருமாறிய ஜேஎன்.1 வகை கொரோனா வைரஸால் 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.

Advertisement

இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. பிறகு 2020ஆம் ஆண்டை முற்றிலுமாக கொரோனா வைரஸ் முடக்கிப்போட்டது. கொரோனா வைரஸ் உருமாறி மக்களை தாக்கியதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பல கோடி மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், லட்சக்கணக்கானோர் பலியாகினர். கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டது. இதனால், கொரோனா தாக்குதலில் இருந்து மக்கள் நோய் தடுப்பு சக்தி பெற்றனர். இதையடுத்து, 2021இல் கொரோனா பரவல் படிப்படியாக குறைய தொடங்கியது.

கடந்த 2022, 2023ஆம் ஆண்டில் இந்தியாவில் மக்கள் இயல்பு வாழ்க்கையை தொடங்கினர். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு இறுதியில் மீண்டும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் உருமாறிய ஜேஎன்.1 வைரஸ் தான். இதற்கு தமிழ்நாடும் விதிவிலக்கல்ல. தமிழ்நாட்டிலும் கூட கொரோனா பாதிப்பு என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் உருமாறிய ஜேஎன் 1 கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ”தமிழ்நாட்டில் தற்போது ஜேஎன்.1 வகை கொரோனா வைரஸால் 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 15 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அனைவரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போதைய சூழலில் புதிய உருமாறிய வைரஸால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இல்லை. அந்த வைரஸால் பாதிக்கப்படும் நபர்கள் விரைவிலேயே குணமாகி விடுகின்றனர். அதாவது 4 நாட்களில் குணமடைகின்றனர். இதனால் மக்கள் பதற்றமடைய தேவையில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது அவசியமாகும். இதனால் முதியவர்கள், குழந்தைகள், இணை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் பொது இடங்களில் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement