மல மலவென பரவிய தீ.! ஹீட்டர் வெடித்து கருகிய 3 வயது மகள் மற்றும் தந்தை.! நடந்தது என்ன.?
ராஜஸ்தான் மாநிலத்தில் ஹீட்டர் வெடித்து சிதறியதில் தந்தை மற்றும் மூன்று மாத கைக்குழந்தை பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சேக்ஹபூர் பகுதியைச் சேர்ந்தவர்கள். தீபக் யாதவ் மற்றும் சஞ்சு தம்பதியினர். இந்த தம்பதியினருக்கு நேசிக்கா என்ற மூன்று மாத கைக்குழந்தை இருந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்கள் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது குளியலறையில் இருந்த ஹீட்டர் வெடித்து சிதறியது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் மூவரும் சிக்கிக்கொண்டனர்.
தீ வேகமாக பரவியதால் அவர்களால் வீட்டில் இருந்து வெளியேற முடியவில்லை. இவர்களது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்தக் கொடூர விபத்தில் தீபக் யாதவ் மற்றும் அவரது மகள் நிஷிகா இருவரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த தீபத்தின் மனைவி சஞ்சு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் இறந்த தீபக் யாதவ் மற்றும் அவரது மகள் நிஷிகாகாவின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். தீ விபத்தில் தந்தை மற்றும் மகள் பலியான சம்பவம் அப்பகுதியில் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.