3 மத்திய அமைச்சர்கள் ராஜினாமா...! அமைச்சரவையில் அதிரடி மாற்றம்...!
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் மத்திய அமைச்சர்களான நரேந்திர சிங் தோமர், ப்ரஹலாத் சிங் படேல், ரேனுகா சிங் ஆகியோர் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதையடுத்து தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதி இருந்தனர். தற்போது நரேந்திர சிங் தோமர், ப்ரஹலாத் சிங் படேல், ரேனுகா சிங் ஆகியோரின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார்.
இதன் காரணமாக மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி உணவு பதப்படுத்தும் துறை இணை அமைச்சராக ஷோபா கரந்தலாஜே நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திர சேகர் ஜல்சக்தித் துறையை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் மத்திய இணை அமைச்சர் பாரதி பவார் பழங்குடியினர் விவகாரத்துறையை கூடுதலாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் ராஜினாமாவை அடுத்து மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டாவுக்கு வேளாண்துறை கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டது.