For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அதிவேகமாக சென்ற ஜீப் லாரி மீது மோதி விபத்து.. 3 பேர் பலி..!! வேலூரில் பயங்கரம்..

3 killed in accident where jeep collided with lorry in Vellore
10:50 AM Dec 04, 2024 IST | Mari Thangam
அதிவேகமாக சென்ற ஜீப் லாரி மீது மோதி விபத்து   3 பேர் பலி     வேலூரில் பயங்கரம்
Advertisement

வேலூர் அருகே கருகம்புத்தூர் என்ற பகுதியில் அதிகாலையில் நடைபெற்ற கொடூர விபத்தில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

வேலூர் அடுத்த கொணவட்டம் பகுதி சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்த ஜீப் நிலைதடுமாறி சாலையில் இருந்த பேரிகார்டில் மோதியுள்ளது. இந்த விபத்தில் ஜீப் உருக்குலைந்த நிலையில், மூவர் உயிரிழந்தனர். ஒருவர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் சம்பவ இடத்தில் சென்று விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறை நடத்திய விசாரணையில் அதிவேகமாக சென்றதால் இந்த விபத்து நடைபெற்றது என தெரிய வந்துள்ளது. இந்த விபத்து காரணமாக சிறிது நேரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்தில் சிக்கியவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more ; தங்கம் விலை இன்று உயர்ந்ததா? குறைந்ததா? இன்றைய நிலவரம் இதுதான்..!

Tags :
Advertisement