முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஏர் இந்தியா முக்கிய அறிவிப்பு...! 3 மணி நேரம் விமானம் லேட் ஆனால் கட்டணம் திரும்ப பெறலாம்...!

05:50 AM May 10, 2024 IST | Vignesh
Advertisement

ஏர் இந்தியா பணியாளர் வேலைநிறுத்தம் காரணமாக சேவையில் ஏற்படும் இடையூறுகள் குறித்து பயணிகளின் கடும் கோபத்திற்கு ஆளாகினர். பயணிகள் தனது விமானத்தை ரத்து செய்யலாம் அல்லது மூன்று மணிநேரத்திற்கு மேல் தாமதமாகிவிட்டால், முழுப் பணத்தையும் திரும்பப் பெறலாம் அல்லது எந்த கட்டணமும் இல்லாமல் பயணத்தை மறு தேதிக்கு மாற்றலாம் என்று கூறியுள்ளது. விமான பணியாளர்கள் எதிர்ப்பால் சேவை முடங்கியதை அடுத்து இந்த அறிவிப்பை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Advertisement

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊழியர்களுடனான சமரச பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் படிப்படியாக எங்கள் செயல்பாடுகளை இயல்பு நிலைக்கு கொண்டு வரும்போது, விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன், எங்களுடன் பறக்க முன்பதிவு செய்த பயணிகள் தங்கள் விமானத்தின் நிலையைச் சரிபார்க்க வேண்டும்.

மேலும் பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது 3 மணிநேரத்திற்கு மேல் தாமதமாகினாலோ, வாட்ஸ்அப் ( 91 6360012345) அல்லது airindiaexpress.com இல் எந்தக் கட்டணமும் இல்லாமல் முழுப் பணத்தைத் திரும்பப் பெறலாம் அல்லது மறு தேதிக்கு பயணத்தை திட்டமிடலாம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
Next Article