For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

3 மாதங்களில் அடுத்தடுத்து 3 என்கவுன்ட்டர்..!! அதிரடி காட்டும் காவல் ஆணையர் அருண்..!!

Subsequent raids have been encountered after Arun took over as Chennai Police Commissioner.
10:51 AM Sep 23, 2024 IST | Chella
3 மாதங்களில் அடுத்தடுத்து 3 என்கவுன்ட்டர்     அதிரடி காட்டும் காவல் ஆணையர் அருண்
Advertisement

சென்னை காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்ற பிறகு அடுத்தடுத்த ரவுடிகள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துவிட்டதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கிடையே, ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சென்னை கமிஷனராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய கமிஷனர் ஆக அருண் பொறுப்பேற்றார். இவர், சென்னை கமிஷனர் ஆக பொறுப்பேற்ற நிலையில், இதுவரை 3 ரவுடிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

திருவேங்கடம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நான்காவது குற்றவாளியாக இருந்தவர் திருவேங்கடம். ஆம்ஸ்ட்ராங்கை கொல்வதற்கான ரூட் மேப்பை கூலிப்படையினருக்கு கொடுத்ததே திருவேங்கடம் தான் என்கின்றனர் போலீஸார். ஆம்ஸ்ட்ராங்கை 2-வதாக வெட்டியதும் இவர் தானாம். ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்த சரியாக 10-வது நாளில் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தை பறிமுதல் செய்ய புழல் பகுதிக்கு அவரை போலீஸ் அழைத்துச் சென்றது. அப்போது, போலீஸாரை தாக்கிவிட்டு திருவேங்கடம் தப்பி ஓட, அதில் எழுந்த மோதலில் அவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இது அருண் பொறுப்பேற்ற பிறகு நடந்த முதல் என்கவுன்ட்டர்.

காக்கா தோப்பு பாலாஜி

பிரபல ரவுடியான காக்கா தோப்பு பாலாஜி கடந்த 18ஆம் தேதியன்று வியாசர்பாடியில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் மீது கொலை, கொலை முயற்சி, மிரட்டல் என மொத்தம் 59 வழக்குகள் உள்ளன. கடந்த செப்.18ஆம் தேதி கொடுங்கையூர் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது காக்கா தோப்பு பாலாஜியின் கார் நிற்காமல் சென்றுள்ளது. அந்த காரை துரத்திச் சென்று மடக்கிய போது வியாசர்பாடியில் இந்த என்கவுன்ட்டர் நடந்துள்ளது. பள்ளி காலத்தில் இருந்தே காக்கா தோப்பு பாலாஜி ரவுடி ஆவதையே கனவாக கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சிசீங் ராஜா

இப்படிப்பட்ட நிலையில் தான், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி சிசீங் ராஜா என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றுதான் இவர் கைதாகினார். இன்று என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளார். ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளில் இதன் மூலம் 2-வது குற்றவாளி என்கவுன்ட்டர் செய்யப்பட்டு உள்ளார்.

Read More : பிரபல ஐடி நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! சென்னை உள்பட 7 இடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Tags :
Advertisement