முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

2ஆம் கட்ட வாக்குப்பதிவு 1 மணி நிலவரம்: கர்நாடகா 38.23%, கேரளா 39.26% வாக்குள் பதிவு…

03:23 PM Apr 26, 2024 IST | Kathir
Advertisement

மக்களவைத் தேர்தல் 2ஆவது கட்டமாக இன்று 13 மாநிலங்களின் 88 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. 12 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் காலமானதால் மத்தியப் பிரதேசத்தின் பெதுல் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் 2-ம் கட்டத்திலிருந்து 3-ம் கட்டத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 5 கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி வரை நடைபெறுகிறது.

Advertisement

தற்போது மக்களவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருக்குறது. 1 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக திரிபுராவில் 54.47 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. அடுத்த படியாக மணிப்பூரில் 54.26 சதவிகித வாக்குகளும், சத்தீஸ்கரில் 53.09 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளது. குறைந்த பட்சமாக மகாராஷ்டிராவில் 31.77% சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

2ஆம் கட்ட வாக்குப்பதிவு - பிற்பகல் 1 மணி நிலவரப்படி:
அசாம் - 46.31%
பீகார் - 33.80%
சத்தீஸ்கர் - 53.09%
ஜம்மு & காஷ்மீர் - 42.88%
கர்நாடகா - 38.23%
கேரளா - 39.26%
மத்தியப் பிரதேசம் - 38.96%
மகாராஷ்டிரா - 31.77%
மணிப்பூர் - 54.26%
ராஜஸ்தான் - 40.39%
திரிபுரா - 54.47%
உத்தரப் பிரதேசம் - 35.73%
மேற்கு வங்கம் - 47.29%

Tags :
2nd phase elctionloksabha election phase 2
Advertisement
Next Article