முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

திருச்சி: 27 வயது இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை.! பட்டதாரி வாலிபரின் உயிரை குடித்த காதல்.! பரபரப்பான தகவல்கள்.!

05:50 PM Dec 30, 2023 IST | 1newsnationuser4
Advertisement

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இளைஞர் ஒருவர் காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள எஸ் புதூர் பகுதியை அடுத்த பூசாரி தோட்டம் என்ற பகுதியில் வசித்து வருபவர் தமிழகன். இவரது மகன் திவாகர் வயது 27. முதுகலை பட்டதாரியான திவாகர் திருச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் பெண் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் இவரது காதல் விவகாரத்தில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட திவாகர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்திருக்கிறார். இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்து கொண்டவரின் உடல் அங்கு வைத்து பிரேத பரிசோதனை செய்யப்பட இருக்கிறது. மேலும் இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் விவகாரத்தால் தற்கொலை செய்து கொண்டாரா.? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா.? என்பது குறித்தும் காவல்துறை விசாரித்து வருகிறது.

Tags :
love affairpolice enquirySuicideTamilnaduTrichy
Advertisement
Next Article