For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Farmers: விவசாயிகளிடமிருந்து 262.48 லட்சம் டன் கோதுமை கொள்முதல்‌...!

05:50 AM May 25, 2024 IST | Vignesh
farmers  விவசாயிகளிடமிருந்து 262 48 லட்சம் டன் கோதுமை கொள்முதல்‌
Advertisement

விவசாயிகளிடமிருந்து நேரடியாக இதுவரை 489.15 லட்சம் டன் அரிசிக்கு ஈடான 728.42 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

2024-25 ரபி சந்தைப் பருவத்தில் நாட்டில் உள்ள முக்கிய கொள்முதல் மாநிலங்களில் கோதுமைக் கொள்முதல் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மத்தியத் தொகுப்பிற்கு இதுவரை 262.48 லட்சம் டன் கோதுமைக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் 262.02 லட்சம் டன் என்ற அளவை விஞ்சியுள்ளது. 2024-25 ரபி சந்தைப் பருவத்தில் மொத்தம் குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.59,715 கோடி வழங்கப்பட்டு 22.31 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

நெல் கொள்முதலும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 2023-24 கரீஃப் சந்தைப் பருவத்தில் ரூ.1,60,472 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்பட்டு 98.26 லட்சம் விவசாயிகளிடமிருந்து நேரடியாக இதுவரை 489.15 லட்சம் டன் அரிசிக்கு ஈடான 728.42 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கொள்முதல் நடவடிக்கைகளை அடுத்து மத்தியத் தொகுப்பில் கோதுமை மற்றும் அரிசியின் தற்போதைய இருப்பு 600 லட்சம் டன்னைக் கடந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement