For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

256 km தூரம்... 'வளைவே இல்லாமல் நேராக செல்லும் ஹைவே!' எங்க இருக்கு தெரியுமா?

01:55 PM May 31, 2024 IST | Mari Thangam
256 km தூரம்     வளைவே இல்லாமல் நேராக செல்லும் ஹைவே   எங்க இருக்கு தெரியுமா
Advertisement

256 கி.மீ. தூரத்தில் எங்குமே வளைவுகளோ அல்லது ஏற்ற இறக்கங்களோ இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலை, உலகின் மிகவும் நீண்ட நேரான நெடுஞ்சாலை என்ற பெயரை பெற்றுள்ளது.

Advertisement

தொலை தூர பயணங்களுக்கு செல்லும் போது அடிக்கடி வளைந்து செல்லும் சாலைகள் என்றால் வாகன ஓட்டிகளுக்கு கொஞ்சம் சிரமமாக இருக்கும். அதிலும் இந்தியா போன்ற நாடுகளில் சில கிலோமீட்டர் தாண்டினாலே சாலைகள் வளைந்து நெளிந்து சென்று கொண்டிருக்கும். மேலும் பள்ளம் மேடு என்று இருப்பதனால் அடிக்கடி கியரை மாற்றி மாற்றி வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க வெண்டி இருக்கும்.

சில கிலோ மீட்டருக்கு சாலைகள் எந்தவித வளைவும் இன்றி, பள்ளம் மேடு இல்லாமல் இருந்தால் அந்த சாலைகளில் செல்லும் போது.. அட.. இப்படியே இந்த சாலைகள் இருந்தால் எப்படி இருக்கும்? என வாகன ஓட்டிகள் மனதில் நினைத்துக்கொள்வார்கள்... அப்படி வாகன ஓட்டிகள் நினைக்கும் அளவுக்கு தான் 256 கி.மீ தூரத்திற்கு எந்த வித வளைவும் இல்லாம, பள்ளம் மேடும் இல்லாமல் ஒரே நேர் ரோடாக ஹைவே சவுதி அரேபியாவில் அமைத்துள்ளது.

News18 Tamil

சவுதி அரேபியாவில் ஹராத் முதல் அல் பத்தா வரை 256 கி.மீ. தூரத்திற்கு ரப் அல்-காலி பாலைவனத்தின் வழியாக வளைவே இல்லாத நேரான நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவை இணைக்கும் 146 கி.மீ. நீளமுள்ள ஐர் நெடுஞ்சாலை உலகின் மிகவும் நேரான சாலை என்று பெயர் பெற்றிருந்தது. இதை விஞ்சி உலகின் மிகவும் நீளமான நேரான நெடுஞ்சாலை என்ற பெயரை சவுதி அரேபியாவில் இருக்கும் 256 கி.மீ. நீள சாலை பெற்றுள்ளது.

முதலில் அரேபிய மன்னருக்காக தனிப்பட்ட முறையில் ஒரு சிறிய சாலை அமைக்கப்பட்ட நிலையில், பின்னர் பொதுமக்களின் பயணத்திற்காக, உலகின் மிகப்பெரிய மணல் பாலைவனத்தின் வழியாக இந்த நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. எண்ணெய் மற்றும் எரிவாயுக்களை இருப்பு வைத்திருக்கும் ஹராத் நகரில் இருந்து, ஐக்கிய அரபு நாடுகளின் எல்லைக்கு அருகில் உள்ள அல் ஃபத்தா வரை இந்த நெடுஞ்சாலை நீண்டு கிடக்கிறது.

256 கி.மீ. தூரத்தில் எங்குமே வளைவுகளோ அல்லது ஏற்ற இறக்கங்களோ இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள இந்த நெடுஞ்சாலை, உலகின் மிகவும் நேரான நீண்ட சாலை என்ற பெயரை பெற்றிருப்பதோடு, ஓட்டுநர்களுக்கும் ஒரு புதிய அனுபவத்தை கொடுப்பதாக, சவுத் சைனா மார்னிங் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது. 256 கி.மீ. தூரமுள்ள இந்த சாலையை வெறும் 2 மணி நேரத்தில் கடக்கலாம் என்றாலும், விபத்துகள் சாதாரணமானவை என்பதால் கவனமுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தல்களை தொடர்ந்து சவுதி அரேபியா அரசு வழங்கி வருகிறது.

Read more ; ‘பற்களை விற்று கோடிகளில் சம்பாத்யம்’ – ஜப்பான் மருத்துவர் சிக்கியது எப்படி!

Tags :
Advertisement