முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மகிழ்ச்சி...! ரூ.25,000 ஆக தொகுப்பூதியம் உயர்வு... மார்ச் - 2025 வரை தொடர தமிழக அரசு அரசாணை...!

25,000 gratuity increase... Tamil Nadu Government Ordinance to continue till March - 2025
06:35 AM Jul 25, 2024 IST | Vignesh
Advertisement

கௌரவ விரிவுரையாளர் பணியிடங்களை மார்ச் - 2025 வரை தொகுப்பூதியம் மூலம் தொடர அனுமதியளித்து அரசாணை வெளியீடு.

Advertisement

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் (சுழற்சி-1 மற்றும் சுழற்சி-11) மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர தொகுப்பூதியத்தினை ரூ.20,000/-லிருந்து ரூ.25,000/-ஆக 01.06.2023 முதல் உயர்த்தி ஆணைகள் வெளியிடப்பட்டன.

அரசு கல்லூரிகளில் 2024-25-ஆம் கல்வி ஆண்டிற்கு சுழற்சி-11-ல் பாடப்பிரிவுகளை நடத்த தேவையான 1661 கௌரவ விரிவுரையாளர்களை தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்ய அனுமதியும், அவர்களுக்கான மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.25,000/- வீதம், 11 மாதங்களுக்கு (11 X 25000 X 1661) ரூ.45,67,75,000/- நிதி ஒதுக்கீடு வழங்குமாறும் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு உழைப்பூதியமாக ரூ.32,50,800/-ஆக மொத்தம் ரூ.46,00,25,800/-ஐ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement
Next Article