’முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை’..!! மின்சார வாரியம் வெளியிட்ட அறிவிப்பு..!! மக்களே உடனே முந்துங்க..!!
தமிழ்நாடு சூரிய மின்சக்தியில் புதிய சாதனை படைத்துள்ளது. சூரிய மின்சக்தி உற்பத்தி 5,979 மெகாவாட்டாக உயர்ந்தது. முன்னதாக, ஆகஸ்ட் 2ஆம் தேதி 5,704 மெகாவாட் உற்பத்தி பதிவாகியிருந்தது. அதேபோல், சூரிய மின்சக்தி மின்கட்டமைப்பில் 41.40 மில்லியன் யூனிட் (mu) பயன்படுத்தப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவு ஆகும். முன்னதாக, ஆகஸ்டு 3ஆம் தேதி 40.9 மியூ அதிகபட்சமாக பயன்படுத்தப்பட்டது.
இது போக தமிழ்நாடு மின்சார வாரியம் நுகர்வோர் நேரடியாக மீட்டர்களை வாங்குவதற்கு அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தியாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இனி மின்சார வாரியத்திடம் இருந்து மட்டும் மீட்டர் வாங்குவதற்காக மக்கள் காத்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. மீட்டர் வாங்க மக்கள் பலர் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில், மின்சார வாரியம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தொழில் நிறுவனங்கள், கடைகள் மற்றும் வீடுகள் உட்பட அனைத்து நுகர்வோருக்கும் பொருந்தும் வகையில், மீட்டர் விற்கும் நிறுவனங்களின் பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இவர்களிடம் மீட்டர் வாங்கிக்கொள்ளலாம். மின்சார வாரியத்திடம் இருந்துதான் வாங்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இவர்களிடம் மீட்டர் வாங்கிய பிறகு, நுகர்வோர் மீட்டர்களை நிறுவுவதற்கு முன் டேம்பர்-ப்ரூஃப் செய்ய டாங்கெட்கோவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
மின்சார வாரிய அதிகாரிகள், 'முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை' என்ற அடிப்படையில் மீட்டர்களை பொருத்துவார்கள். முன்னதாக, டாங்கெட்கோ மீட்டர்களை கொள்முதல் செய்து சோதனை செய்து, பிரிவு அலுவலகங்களுக்கு மொத்தமாக அனுப்பியது. இனி டாங்கெட்கோ அங்கீகரித்த நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக மக்களே வாங்கிக் கொள்ள முடியும்.
Read More : உல்லாசத்திற்கு பிறகு பாலியல் தொழிலாளியை கொன்று மூளையை சமைத்து சாப்பிட்ட இளைஞர்..!! பரபரப்பு வாக்குமூலம்..!!