For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

25 முதல் 45 வயது... கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு...!

25 to 45 years... Important notice for women abandoned by their husbands
08:33 AM Sep 10, 2024 IST | Vignesh
25 முதல் 45 வயது    கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு
Advertisement

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் மாநில அளவில் அமைக்கும் பொருட்டு வாரியத்திற்கென அலுவல்சாரா உறுப்பினர்களை நியமித்தல் தொடர்பாக விண்ணப்பங்களை பெறும் பொருட்டு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் உடன் tnwidowwelfareboard.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Advertisement

தமிழ்நாட்டிலுள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளை களைந்து அவர்கள் வாழ்வதற்குரிய வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சுய உதவிக்குழுக்கள் அமைப்பது, தொழிற்பயிற்சிகள் வழங்குதல், சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்கு தேவையான திட்டங்களை வகுத்து செயல்படுத்துவது இதன் நோக்கமாக உள்ளது. அதன் பொருட்டு, கைம்பெண்கள் (ம) ஆதரவற்ற பெண்கள் சுயதொழில் துவங்க கீழ்கண்ட தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வாரியத்தில் பதிவு செய்து உறுப்பினராக இருக்க வேண்டும். வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 25-45 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,20,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒருவர் ஒருமுறை மட்டுமே மானியம் பெற தகுதியுடையவர் ஆவார். சுயதொழில் புரிய மானியம் பெற அளிக்கப்டும் விண்ணப்பதுடன் கீழ்க்கண்ட சான்றுகள் இணைக்கப்பட வேண்டும்.

கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் என்பதற்கான சுய சான்று (Self Declaration Certificate). வருமானச் சான்று (Income Certifiacte). குடும்ப அட்டை நகல் (Ration Card Xerox). ஆதார் அட்டை நகல் (Aadhaar Card Xerox). தற்போதைய வசிப்பிட முகவரிக்கான ஏதேனும் ஒரு சான்று (Any Proof for Current Resident Address). ஆதரவற்ற/நலிவுற்ற பெண்கள் மற்றும் முதிர்கன்னிகள் கைம்பெண்கள் பிரதிநிதிகள், பெண் கல்வியாளர்கள், பெண் தொழில் முனைவோர்கள், பெண் விருதாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பெண் பிரதிநிதிகள் போன்ற நபர்களின் விண்ணப்பித்தினை சமர்ப்பிக்க வேண்டும்.

Tags :
Advertisement