முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Fisherman: 24 தமிழக மீனவர்கள் விடுதலை...! ஒருவருக்கு 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை...!

06:29 AM Apr 05, 2024 IST | Vignesh
Advertisement

இலங்கை நீதிமன்றம் நேற்று 24 தமிழக மீனவர்களை விடுவித்துள்ளது, ஆனால் ஒருவருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதித்தது. இந்த 25 மீனவர்களும் மார்ச் 20 ஆம் தேதி ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட மூன்று படகுகளுடன் கைது செய்யப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் அந்தோணி ஆரோன், ராஜ், அருளானந்தம் ஆகியோருக்கு சொந்தமானது.

Advertisement

மீனவர்களை ஏப்.4-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க இலங்கை நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டது. இவர்களை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தியபோது, 24 மீனவர்களும் மீண்டும் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டனர். படகு உரிமையாளர்கள் ஆரோன் மற்றும் ராஜ் ஆகியோர் படகு ஓட்டுனர்களாக செயல்பட்டதால், அவர்களது இரண்டு படகுகளையும் தேசியமயமாக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததற்காக மற்றொரு படகு ஓட்டுநரான ஜெகனுக்கு, ஆறு மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். ஜெகனின் படகு உரிமையாளர் அருளானந்தம் அனைத்து படகு ஆவணங்களுடன் ஜூன் 12-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. ஜெகன் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 24 மீனவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

Advertisement
Next Article