For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அதிக வெப்பம்…! உண்மையாகும் பாபா வங்காவின் 2024ஆம் ஆண்டுக்கான கணிப்புகள்..! அப்போ அதுவும் நடக்குமா..!

04:03 PM May 05, 2024 IST | shyamala
அதிக வெப்பம்…  உண்மையாகும் பாபா வங்காவின் 2024ஆம் ஆண்டுக்கான கணிப்புகள்    அப்போ அதுவும் நடக்குமா
Advertisement

2024ம் ஆண்டு பிறந்து நான்கு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், உலகம் முழுவதும் பல்வேறு வகையான அசௌகரியங்கள் நடந்து வருகின்றன. பார்வையற்ற பல்கேரிய தீர்க்கதரிசியான பாபா வங்கா, 1996 இல் தனது 85 வயதில் காலமானதற்கு முன்பு கூறிய சில கணிப்புகளை கணித்தார். அந்த கணிப்புகள் ஏற்கனவே கவனத்தை ஈர்த்து வருகின்றன. அவரது கணிப்புகளில் அமெரிக்காவில் நடந்த உலக வர்த்தக மைய பயங்கரவாத தாக்குதல், செர்னோபில் பேரழிவு மற்றும் இளவரசி டயானாவின் மரணம் உள்ளிட்டவை அடங்கும்.

Advertisement

இந்நிலையில், 2024ம் ஆண்டு பற்றியும்  சில கணிப்புகளை பாபா வங்கா கணித்து வைத்துள்ளார். அதன்படி 2024-ல் இயற்கை சீற்றங்கள் மற்றும் தீவிர வானிலை ஏற்படும் என பாபா வங்கா கணித்துள்ளார். உலக வெப்ப அலைகளின் அதிர்வெண் 67 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அறிவியல் முன்னேற்றங்களில் வெளியிடப்பட்ட அறிக்கை கூறுகிறது. இந்த வெப்ப அலைகளின்போது, உச்ச வெப்பநிலை 40 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டதை விட அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

2024ல் பெரும் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியிருந்தார். அதே போல், இங்கிலாந்து,  ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும்,  உலகம் இந்த ஆண்டில் மிகப்பெரிய மருத்துவ மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளைச் செய்யும் என கணித்திருந்தார்.

பாபா கூறியதைப்போலவே, அறிவியலாளர்கள் சிலர், நுரையீரல் புற்றுநோய்க்கான தடுப்பு மருந்து ஒன்றைத் தயாரித்துவருவது குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. புற்றுநோய்க்கான தடுப்பூசியை விரைவில் நோயாளிகளுக்குக் கிடைக்கக்கூடிய தடுப்பூசியாக உருவாகும், அந்த நிலையில் ரஷ்ய விஞ்ஞானிகள் நெருங்கிவிட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இப்படி பாபா வங்காவின் கணிப்புகள் உண்மையாகிக்கொண்டே வருவதால் உலக மக்கள் வவியப்பில் ஆழ்ந்துள்ளார்கள்.

’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா..? வெளியான சூப்பர் குட் நியூஸ்..!!

Tags :
Advertisement