முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

2024 மத்திய பட்ஜெட் தயாரிப்பு!. நாடாளுமன்றத்தில் அல்வா கிண்டும் நிகழ்வு!. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு!

2024 Central Budget Preparation!. Alva Kindu event in Parliament! Finance Minister Nirmala Sitharaman's participation!
09:04 AM Jul 17, 2024 IST | Kokila
Advertisement

Union Budget 2024: நிர்மலா சீதாராமன் 7வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இதன் மூலம் தொடர்ச்சியாக அதிகமுறை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த பெருமையை அவர் பெறவுள்ளார்.

Advertisement

2024 மத்திய இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் காரணமாக முழுமையாக பட்ஜெட் ஆக இல்லாமல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நாடாளுமன்ற தேர்தல் முடிவுற்று பிரதமர் மோடி தலைமையிலான அரசு 3வது முறையாக பதவி ஏற்றுள்ள நிலையில், தற்போது 2024-25ம் நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் வரும் 23ம்தேதி தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 7வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இதன்மூலம் தொடர்ச்சியாக அதிகமுறை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த பெருமையை அவர் பெறவுள்ளார். இதற்கு முன்னதாக மொரார்ஜி தேசாய் 6 முறை தொடர்ச்சியாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ததே அதிகபட்சமாகும்.

தேர்தலுக்கு பிந்தைய பட்ஜெட் என்பதுடன், நடைபெற்றுமுடிந்த மக்களவை தேர்தலில் பாஜகவின் இடங்களை முந்தைய தேர்தலை ஒப்பிடுகையில், தற்போது குறைந்திருப்பதால், இந்த பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடமும் எழுந்துள்ளது. பாஜகவின் தேர்தல் சறுக்கலுக்கு நாட்டில் படித்த இளைஞர்களுக்கு வேலைப்பின்மை அதிகரிப்பு காரணமாக சொல்லப்படும் நிலையில், வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்கான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் தாக்கலுக்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று பட்ஜெட் தாக்கலுக்கு முன்னர் நடத்தப்படும் முன்னர் பாரம்பரிய அல்வா கிண்டும் பணி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது, இதில் கலந்துகொண்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டியதுடன், அதை அதிகாரிகளுக்கு வழங்கினார். இதையடுத்து, 'லாக் இன்' காலம் தொடங்கியது. பட்ஜெட் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடப்படும். எனவே, நேற்று தொடங்கி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை பட்ஜெட் தயாரிப்பு பணிகள் ஈடுபடும் அதிகாரிகள் யாரும் வீட்டிற்கு செல்லமாட்டார்கள் . பட்ஜெட் ரகசியத்தை காக்க அவர்கள் நிதியமைச்சக அலுவலகத்திலேயே தங்குவார்கள்.

Readmore: ஐடிஆர் தாக்கல் 2024!. தாமதமாகத் தாக்கல் செய்தால் எவ்வளவு அபராதம் செலுத்த வேண்டும்?. விதிகள் இதோ!

Tags :
Halwa ceremonyparliamentUnion Budget 2024
Advertisement
Next Article