2000 சதுரடியில் வீடு கட்ட நினைக்கிறிங்களா... பொருட்கள் மற்றும் செலவு குறித்து பார்க்கலாம்..
வீடு கட்டுவது என்றால் அது பெரிய விஷயம். ஏனென்றால் அனைவருக்கும் வீடு கட்டுவதற்கு தேவையான பணம் கையில் வைத்திருப்பதில்லை. அங்க இங்க கடனை வாங்கி வீட கட்டிடனும் நினைக்கிறவங்களுக்காக தான் இது. ஒரு வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவு ஆகும். அதற்கு எவ்வளவு பொருட்கள் தேவைப்படும் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா..? தோராயமாக அது எவ்வளவு தேவைப்படும் என்பதை பார்க்கலாம் வாங்க.
ஒரு டன் கம்பிகளின் விலை 75,000 ரூபாய் என்றால் 2000 சதுரடிக்கு 10 டன் கம்பிகள் தேவைப்படும்.
2000 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு எவ்வளவு M சாண்ட் மணல் தேவைப்படும். 1 யூனிட் விலையானது 38 ஆயிரம் என்றால் 48 யூனிட் மணல் தேவைப்படும். ஆனால், P சாண்ட் மணல் 1 யூனிட் விலை 5 ஆயிரம் ரூபாய் என்றால் 2000 சதுர அடி வீடு கட்டுவதற்கு 18 யூனிட் போதுமானது.
2,000 சதுரடிக்கு தேவைப்படும் 44 ஆயிரம் செங்கல்கள் தேவைப்படுகிறது. 20 mm Aggregate ஜல்லியின் 1 யூனிட் விலை 3 ஆயிரம் ரூபாய் ஆகும். அதாவது 2000 சதுரடிக்கு 20 யூனிட் நமக்கு தேவைப்படும். அதேபோல் 40 mm Aggregate ஜல்லியின் விலை 2 ஆயிரத்து 800 ரூபாய் என்றால் நமக்கு தேவையான ஜல்லிகள் 18 யூனிட் ஆகும்.
அடுத்தது சிமெண்ட் தான், வீடு கட்டுவதில் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. அப்படி இருக்கும்பட்சத்தில் அதனை சரியாக தேர்வு செய்து அதன் பின்பு தான் வீடு கட்டவேண்டும். இப்போது 2000 சதுரடி வீட்டுக்கு 1000 மூட்டைகள் சிமெண்ட் தேவைப்படும்.
இதுபோன்று மரப்பொருள், ஸ்டீல் உள்ளிட்ட பொருட்கள் தேவைப்படும். இதற்கு மட்டுமே 50 லட்சம் செலவாகும். பிறகு கையில் ஒரு 10 லட்சம் பணம் வைத்துக்கொண்டு அதன் பின்பு வீடு கட்டுவதற்கு ஆரம்பம் செய்யவது நல்லதாகும்.
read more.. மருந்தாகும் குழந்தையின் தொப்புள் கொடி..!! அடேங்கப்பா, இதுல இத்தனை மருத்துவ நன்மைகளா?