For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இயற்கைக்கு மாறான உடலுறவுக்கு மறுப்பு.! முகத்தை சிதைத்து, 20 வயது இளைஞன் படுகொலை.! நண்பன் செய்த கொடூரம்.!

02:37 PM Feb 01, 2024 IST | 1newsnationuser4
இயற்கைக்கு மாறான உடலுறவுக்கு மறுப்பு   முகத்தை சிதைத்து  20 வயது இளைஞன் படுகொலை   நண்பன் செய்த கொடூரம்
Advertisement

புதுடெல்லியில் இயற்கைக்கு மாறான உடலுறவு வற்புறுத்தி, அதற்கு ஒத்துழைக்காத தனது நண்பனைக் கொன்றதாக ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஜலோன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 20 வயது இளைஞரான, பிரமோத்குமார் சுக்லா. அவரது நண்பர் ராஜேஷ் குமார் பீகார் மாநிலம் மாதேபுராவைச் சேர்ந்தவர். இருவரும் கடந்த ஜனவரி 17ஆம் டெல்லியில் உள்ள மோரிகேட் டிடிஏ பூங்காவில் அமர்ந்து ஒன்றாக பீர் குடித்துக் கொண்டிருந்தனர். ஆள் நடமாட்டம் இல்லாத அந்த பகுதியில் இயற்கைக்கு மாறான உடலுறவுக்கு ஈடுபட ராஜேஷ், பிரமோத்குமாரை வற்புறுத்தியுள்ளார்.

இதனை விரும்பாத பிரமோத்குமார் ராஜேஷுடன் கைகலப்பில் ஈடுபட்டார். ஆத்திரத்தில் ராஜேஷ் பிரமோத்குமாரை சரமாரியாக தாக்கிக் கொன்றார். இறந்தவரின் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக அவரது முகத்தையும் சிதைத்துள்ளார். பின்பு இறந்தவரின் பாக்கெட்டில் இருந்த ரூ.18,500 மற்றும் அவரது செல்போனை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார். அந்த செல்போனை 400 ரூபாய்க்கு டெல்லி ரயில் நிலையத்தில் ஒரு நபரிடம் விற்றுள்ளார்.

தான் கைது செய்யப்படுவதை தவிர்ப்பதற்காக அங்கிருந்து ரயில் மூலமாக பஞ்சாப் சென்றுள்ளார். பிரமோத்குமார் இடமிருந்து கொள்ளையடித்த பணத்தில் ரூ.10,000க்கு செல்போனையும் வாங்கியுள்ளார்.

டிடிஏ பூங்காவில் இருந்து வந்த தகவலின் பெயரில் காவல்துறை துணை ஆணையர் (வடக்கு) மனோஜ் குமார் மீனா, இறந்த பிரமோத்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் திறம்பட புலனாய்வு செய்து குற்ற செயலில் ஈடுபட்ட ராஜேஷை பாட்னாவில் வைத்து கைது செய்துள்ளார். இது குறித்து ராஜேஷ் குமார் மேல் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

Tags :
Advertisement