PMEGP: 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் ரூ.20 லட்சம் கடன்...! மத்திய அரசின் சூப்பர் திட்டம்...! மிஸ் பண்ணிடாதீங்க
தொழில் தொடங்க ஆர்வமுள்ள தகுதிவாய்ந்த இளைஞர்களுக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம்.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில் சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டு மாவட்ட தொழில் மையம், கதர் கிராமத் தொழில்கள் ஆணையம் மற்றும் கதர் கிராமத் தொழில்கள் வாரியம் மூலம் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டம் தொடர்பான மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாம் இன்று காலை 10.30 மணிக்கு, மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், உற்பத்தி தொழிலுக்கு ரு.50.00 இலட்சம் வரையிலும், சேவைத் தொழிலுக்கு ரு. 20.00 இலட்சம் வரையிலும், கடனுதவி பெற 8- ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். திட்ட மதிப்பீடு உற்பத்தி தொழிலுக்கு ரூ.10.00 இலட்சத்திற்கு குறைவாகவும், சேவைத் தொழிலுக்கு ரூ. 5.00 இலட்சத்திற்கு குறைவாகவும் இருக்கும் பட்சத்தில் கல்வித்தகுதி ஏதும் தேவையில்லை. சிறப்பு பிரிவினர் 5 சதவீதமும், பொதுப்பிரிவினர் 10 சதவீதமும் திட்ட மதிப்பீட்டில் முதலீடு செய்ய வேண்டும். இத்திட்டத்தின் கீழ் சிறப்பு பிரிவினர் 35 சதவீதமும், நகர்ப்புற/பொதுப்பிரிவினர் 15 சதவீதமும், கிராமப்புற/பொதுப்பிரிவினர் 25 சதவீதமும் மானியத் தொகை பெறலாம்.
மேலும் தொழில் தொடங்க ஆர்வமுள்ள தகுதிவாய்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம். பள்ளி மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, விலைப்பட்டியல் மற்றும் திட்ட அறிக்கை ஆகிய ஆவணங்களுடன் வரும் பட்சத்தில் இணையதளம் வாயிலாக கடன் விண்ணப்பம் பதிவேற்றப்பட்டு உடனடியாக வங்கிக்கு பரிந்துரை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் விவரங்கள் அறிய www.kviconline.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் ,8925533940, 89255 33941 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு இத்திட்டம் குறித்து ஆலோசனை பெறலாம்.