முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

+2 மாணவியை பலாத்காரம் செய்து மறைமுகமாக திருமணம் செய்து கொண்ட பள்ளி நிர்வாகி..!! தென்காசியை அதிரவைத்த சம்பவம்..!!

Police arrested a school administrator in a case of sexually harassing a student near Sankarankoil.
04:20 PM Nov 06, 2024 IST | Chella
Advertisement

சங்கரன்கோவில் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பள்ளி நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பெரியசாமியாபுரம் கிராமத்தில் தனியார் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் நிர்வாகியும், ஆசிரியருமான கோபால் மகன் கோபிநாத் (29). இவர், கடந்தாண்டு அதே பள்ளியில் படித்து வந்த 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், அந்த மாணவியை அவர் மறைமுகமாக திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அந்த மாணவி பள்ளிப்படிப்பை முடித்த நிலையில், கோபிநாத் மற்றும் அந்த மாணவி நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் பரவியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் உறவினர்கள், இதுகுறித்து சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி விசாரணை நடத்தியதில், கோபிநாத் அந்த மாணவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோபிநாத்தை காவல்துறையினர் கைது செய்தனர். கோபிநாத்துக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இல்லாத நிலையில், அவரது மனைவி பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

Read More : அரசு ஊழியர்கள் மீது வழக்கா..? இனி அனுமதி பெற வேண்டும்..!! உச்சநீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு..!!

Tags :
சங்கரன்கோவில்தென்காசி மாவட்டம்பள்ளி மாணவிபாலியல் தொல்லை
Advertisement
Next Article