ஒடிசாவில் பெரும் சோகம்...! படகு கவிழ்ந்து 2 நபர்கள் உயிரிழப்பு.. 8 பேர் மாயம்...!
ஒடிசாவின் ஜார்சுகுடா மாவட்டத்தில் உள்ள மகாநதி ஆற்றில் வெள்ளிக்கிழமை படகு கவிழ்ந்த விபத்தில், இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது மேலும் 8 பேர் காணாமல் போயுள்ளனர். 35 பயணிகளை உள்ளூர் மீனவர்கள் மீட்டு பத்திரமாக கரைக்கு கொண்டு வந்தனர்.
ஒடிசாவின் ஜார்சுகுடா மாவட்டத்தில் உள்ள மகாநதி ஆற்றில் வெள்ளிக்கிழமை படகு கவிழ்ந்த விபத்தில், இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர், 8 பேர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களின் உடலை மீட்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 35 பயணிகளை உள்ளூர் மீனவர்கள் மீட்டு பத்திரமாக கரைக்கு கொண்டு வந்தனர். அனுபவத்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
படகு பர்கர் மாவட்டத்தில் உள்ள பதர்செனி குடாவிலிருந்து பாஞ்சிபள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. படகில் சுமார் 50 பயணிகள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜார்சுகுடா மாவட்டத்தில் உள்ள ரெங்கலி காவல்நிலையத்தில் உள்ள சாரதா காட் பகுதியை அடைவதற்கு முன்பு படகு கவிழ்ந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மீனவர்களின் மீட்புப் பணிகளுக்கு மேலதிகமாக, காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் மேலும் 8 பயணிகளை மீட்டனர். காணாமல் போன மற்ற பயணிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.