மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மேலும் 2 லட்சம் பயனாளிகள்..!! எப்போது ரூ.1,000 கிடைக்கும்..? செம குட் நியூஸ்..!!
தமிழ்நாடு அரசின் சார்பில் மகளிருக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், ஏற்கனவே புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்து இனி பெற இருக்கும் குடும்பத் தலைவிகள் உரிமைத் தொகைக்கும் விண்ணப்பிக்க இருப்பதாகவும், இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழ்நாட்டில் மகளுருக்கு உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தகுதி இருந்தும் தங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என பலர் முறையிட்டதைத் தொடர்ந்து அவர்களுக்கு மீண்டும் மேல்முறையீடு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டது. தொடர்ந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்ட நிலையில், தற்போது சுமார் ஒரு கோடியே 15 லட்சம் பேர் மாதம் மகளிர் உரிமைத்தொகை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் புதிதாக மகளிர் உரிமைத்தொகை பயனாளிகளை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதற்கிடையே மக்களவை தேர்தல் நிறைவடைந்தவுடன் ஏற்கனவே விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள், இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் என கூடுதலாக பயனாளிகள் இணைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது மேலும் சுமார் 2 லட்சம் பயனாளிகள் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
2023 ஜனவரி மாதத்தில் இருந்து உரிமை தொகைக்காக விண்ணப்பித்தவர்களின் தகுதி சரிபார்ப்பு உள்ளிட்ட நடைமுறைகள் இருந்த நிலையில், புதிதாக திருமணம் செய்தோர் மற்றும் குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தோர் என சுமார் 2 லட்சம் பேருக்கு குடும்ப அட்டை வழங்கப்படாமல் இருக்கிறது. இந்நிலையில், தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டதால், தற்போது ஏற்கனவே குடும்ப அட்டைக்காக விண்ணப்பித்தவர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்படவில்லை. அதே நேரத்தில் பலருக்கு குடும்ப அட்டை தயாராக இருப்பதாக குறுஞ்செய்தி வந்திருப்பதாக கூறப்படுகிறது.
புதிதாக விண்ணப்பித்தவர்கள் மட்டும் 2 லட்சத்திற்கும் மேல் இருக்கும் நிலையில், ஜூன் மாதம் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. அப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்படும். எனவே, ஜூன் மாதத்திற்கு பிறகு புதிய குடும்ப அட்டைகள் பயனாளிகளுக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதையடுத்து, புதிதாக குடும்ப அட்டை பெற்றவர்கள் ஏற்கனவே விண்ணப்பிக்காதவர்களுக்கு மீண்டும் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் எனவும் இதற்காக நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து தற்போது அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
Read More : 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!! இடி மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!!